IND vs AFG 1st T20: மீண்டும் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்ட சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால்! முதல் டி20யில் நோ சான்ஸ்!

இந்தியா – ஆப்கானிஸ்தான்:

தென்னாப்பிரிக்காவில் நீண்ட சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு முதல் முறையாக சொந்த மண்ணில் விளையாடுகிறது. இந்திய அணி டி20 தொடருடன் சொந்த மண்ணில் புத்தாண்டை தொடங்கவுள்ளது. ஆப்கானிஸ்தானுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோகத் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று ஜனவரி 11 ம் தேதி மொஹாலியில் நடைபெற்று வருகிறது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டியில் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம்பெற்றனர். அதேபோல், டி 20 போட்டிகளில் இருந்து தொடர்ந்து ஓரங்கட்டப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்ப்பட்டது. அதேபோல், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இந்திய அணியில் இடம் பெற்றனர். இதனிடையே முதல் டி 20 போட்டியில் விராட் கோலி விளையாட மாட்டார் என்றும் தனிப்பட்ட சில காரணங்களால் அவர் முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளார் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் கூறியிருந்தார். அதேபோல், சுப்மன் கில் விராட் கோலிக்கு பதிலாக களம் இறங்குவதாகவும் தெரிவித்திருந்தார் டிராவிட்.

சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு இல்லை:

இந்நிலையில் தான் இன்றைய ஆடும் லெவன் போட்டியில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. மேலும், விக்கெட் கீப்பர்களான சஞ்சு சாம்சன் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் அணியில் இடம்பெற்றதால் முதல் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக யார் செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. அதேபோல், தொடக்க ஆட்டக்காரராக யார் களமிறங்குவார் என்ற கேள்வியும் எழுந்தது.

இச்சூழலில், தான் இன்று நடைபெற்ற வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆடும் லெவனில் சஞ்சு சாம்சன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேநேரம் ஜித்தேஷ் சர்மா அணியில் இடம் பெற்றிருக்கிறார்.மேலும், ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, இடுப்பு வலி காரணமாக ஜெய்ஸ்வாலுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க: Rahul Dravid Birthday: விட்டு வைத்த களத்திலே… சிங்கம் ஒன்று நுழையுதோ… The Wall (என்ற) ட்ராவிட்டின் 51வது பிறந்தநாள் இன்று!

மேலும் படிக்க: Mohammed Shami: அர்ஜூனா விருது! முன்னாள் மனைவிக்கு முகமது ஷமி கொடுத்த பதிலடி – நெட்டிசன்கள் கருத்து

Source link