In Ayodhya we are ready to provide KFC a space if only veg foods allowed Govt official | KFC in Ayodhya: அயோத்தியில் கே.எஃப்.சி. கடை! இது லிஸ்ட்லயே இல்லையே


அயோத்தி ராமர் கோயில்:
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது.  குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார். கோவிலின் மற்ற பகுதிகளில் இன்னமும் வேலைகள் நடைபெற்று  வந்தாலும், குழந்தை ராமர் கோவில் சிலை அமைந்துள்ள பகுதி மட்டும் அனைத்தும் வேலைகளும் முடிந்து, பக்தர்கள் தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டது.
பிரதமர் மோடி கோவிலைத் திறந்து வைத்த கடந்த 22-ம் தேதியன்று, ஆயிரக்கணக்கான வி.வி.ஐ.பி.கள் மட்டும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைக்கப்பட்டு குழந்தை ராமரை தரிசனம் செய்தனர். அதன்பின், 23-ம் தேதி, அனைவரின் பார்வைக்கும் கோவில் திறக்கப்பட்டது.
சுமார் 1800 கோடி ரூபாய் செலவில், பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த கோவிலைக் காண்பதற்காக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அயோத்தியில் முதல்நாளே திரண்டு இருந்தனர். மக்களுக்கு திறந்துவிடப்பட்ட முதல் நாளிலேயே 5 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்ததாக உத்தர பிரதேச தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது..
ராமர் கோயிலுக்கு அருகில் கே.எஃப்.சி. கடையா?
இன்னமும் கூட்டம் குறையாததால், தற்போதும் பக்தர்களின் கூட்டத்தால், அயோத்தி திணறி வருகிறது. அதே நேரத்தில், கோடிக்கணக்கல் வருவாயும் குவிந்து வருகிறது. இந்த நிலையில், அயோத்தியில் கே.எஃப்.சி. கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
ஆனால், சைவ உணவு வகைகளை மட்டுமே அக்கடையில் விற்பனை செய்ய வேண்டும் என அயோத்தி மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அயோத்தி ராமர் கோயிலை சுற்றுயுள்ள 15 கி.மீ தொலையில் உணவு விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் இறைச்சி  மற்றும் மதுபானங்கள வழங்கக் கூடாது என்று கோயில் நிர்வாகம் ஏற்கனவே  கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சைவ உணவுகள் மட்டுமே விற்க வேண்டும்
ஏற்கனவே Dominos, Pizza Hut போன்ற கடைகளில் சைவ உணவுகளை மட்டுமே விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது கேஎஃப்சி கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது.  ஆனால், சைவ உணவுகளை மட்டுமே விற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து அயோத்தி அரசு அதிகாரி கூறுகையில், ”அயோத்தியில் கே.எஃப்.சி. கடை அமைக்க நாங்கள் அனுமதி அளிக்கிறோம். ஆனால், நாங்கள் அசைவ உணவுகளை இங்கு அனுமதிக்கவில்லை. சைவ உணவுகளை மட்டுமே விற்க முடிவு செய்தால் கே.எஃப்.சி.க்கு இடம் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.

மேலும் படிக்க
CM MK Stalin: மாநில உரிமையை பறித்ததுதான் மோடி பிரதமராக செய்த முதல் வேலை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
Election Commission: நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகள் நியமனம்

மேலும் காண

Source link