ABP Ideas Of India 3.0: ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா ” நிகழ்ச்சியில் பேசிய தலைமை செயல் அதிகாரி அவினாஷ் பாண்டே, நிகழ்ச்சியின் நோக்கம் தொடர்பாக விரிவாக பேசினார்..
ஏபிபி-யின் ”ஐடியாஸ் ஆஃப் இந்தியா” :
ஏபிபி நெட்வர்க்கின் வருடாந்திர நிகழ்வான ‘ஐடியாஸ் ஆஃப் இந்தியா’ உச்சிமாநாட்டின் மூன்றாவது எடிஷன்மும்பையில் இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வை ஏபிபி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அவினாஷ் பாண்டே, சீஃப் எடிட்டர் அதிதேப் சர்கார் மற்றும் ஏபிபி பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி துருபா முகர்ஜி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பேசிய அவினாஷ் பாண்டே, அனைத்து முக்கிய பிரமுகர்களையும் பார்வையாளர்களையும் வரவேற்றார்.
”நட்சந்திரங்களை அடைவதே வாழ்க்கை”
“நாங்கள் 2022 இல் ”ஐடியாஸ் ஆஃப் இந்தியாவைத் தொடங்கியபோது, For Love of the Game படத்தில் இடம்பெற்று இருந்த கெவின் காஸ்ட்னர் போல இருந்தோம். பேச்சாளர்களின் குரலை கேட்க மக்கள் வருவார்களா? என்று நினைத்தோம். ஆனால், சரியானதை நீங்கள் உருவாக்கினால், அவர்கள் வருவார்கள்” என்ற மேற்குறிப்பிடப்பட்ட படத்தில் வரும் பிரபல வசனத்தை போன்று, மக்கள் வந்தார்கள். தொடர்ந்து மேலும் ஒரு உச்சி மாநாடு நடைபெற்றது. நாங்கள் மிகப் பெரிய கனவு காண்கிறோம் என்று பலர் சொன்னார்கள். ஆனால் நட்சத்திரங்களை அடையாவிட்டால் வாழ்க்கை என்னவாகும். எங்கள் முதல் இரண்டு உச்சி மாநாடுகளும் மகத்தான வெற்றியைப் பெற்றன. உங்கள் அனைவருக்கும் நன்றி. மேலும் பெரும் மாற்றங்கள் நிகழ உள்ள ஒரு வருடத்தில் ”ஐடியாஸ் ஆஃப் இந்தியா” நிகழ்வின் மூன்றாவது எடிஷனோடு நாங்கள் மீண்டும் வந்துள்ளோம்.
”ஒரே ஆண்டில் 60 தேர்தல்கள்”
தேர்தல்கள், பருவநிலை மாற்றங்கள் மற்றும் போரின் கொடூரங்கள் குறித்து பேசிய பாண்டே, ” நடப்பாண்டில் உலகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளன. அனைத்து தேர்தல்களும் ஜனநாயகத்தை முன்னெடுத்துச் செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால், மக்கள் தங்களின் கடமையை செயல்படுத்தி கருத்துகளை தெரிவிப்பார்கள். இதே ஆண்டில் பல இடங்களில் வெப்பநிலை அதிகமாகவும், பல இடங்களில் இன்னும் குறைவாகவும் இருக்கும். காற்று, நிலம் மற்றும் நீரிலுள்ள மாசுகள் நம் வாழ்வை மாசுபடுத்தலாம். இந்த ஆண்டில் காடுகள் பற்றி எரியலாம்மற்றும் பனிப்பாறைகள் உருகலாம். பல குடும்பங்களை அழிப்பது மற்றும் சொந்த மண்ணில் புலம்பெயர்வது போன்ற நிகழ்வுகளுக்கு காரணமான மோசமான இரண்டு போர்கள் இந்த ஆண்டிலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளது.
”ஏபிபி-யின் கவனம்”
இது நம்பிக்கை, நெகிழ்ச்சி மற்றும் மறுகற்பனைக்கான பருவம். இந்தியாவின் ஐடியாஸ் 3.0 இல், இந்த மகத்தான தேசத்தின் மக்கள் மற்றும் அதற்கு அப்பால் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். 3.0 நிகழ்வில் உணர்ச்சி மற்றும் அறிவார்ந்த செயல்பாடுகளில் சிறந்த விளங்கும் நபர்களை உங்கள் முன் நிறுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.
மேலும் காண