தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம்.
இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஆதி காரில் வந்து கொண்டிருக்கும்போது வாசுவுக்கு ஆக்சிடென்ட் நடந்த இடத்தில் கார் ஸ்கிட்டாகி ஆப் ஆகி விட, டீ கடைக்காரர் “பார்த்து தம்பி, இந்த இடத்துல தான் ஒரு பையனுக்கு ஆக்சிடென்ட் ஆச்சி” என்று சொன்னதும் ஆதி அந்த இடத்திற்கு செல்லும்போது அவனது இதயத்திற்குள் ஏதோ ஒரு மாற்றம் உருவாகிறது.
பிறகு டீக்கடையில் உட்கார்ந்திருக்கும் துரையைப் பார்த்து “அண்ணன் பொண்டாட்டி உனக்கு அம்மா மாதிரி, அவளைப் போய் கல்யாணம் பணிக்க பார்க்குற? தமிழுக்கும் பாரதிக்கும் ஏதாவது ஒன்னுனா நான் வருவேன் டா” என்று வார்னிங் கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பி வருகிறான்.
ஆதி வாசு போலவே நடந்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சியடையும் துரை, பதறியடித்து ஓடி வந்து மணியிடம் இந்த விஷயத்தை சொல்ல, “எவன்டா அவன், அவனால் என்ன பண்ண முடியும். பாத்துக்கலாம் விடு!” என்று ஆறுதல் சொல்கிறான்.
அதைத் தொடர்ந்து வீட்டில் கல்யாண வேலைகள் நடக்க உறவினர்கள் எல்லோரும் வரத் தொடங்குகின்றனர். லதாவும் வீட்டுக்கு வந்து பாரதியைப் பார்த்து “ஏண்டி இப்படி பண்ண?” என்று திட்டுகிறார். தமிழ் துரை கல்லைத் தூக்கி ஒரு பெண் மீது போடப்போன விஷயத்தை பார்த்ததில் பயந்து அதை அம்மாவிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறாள்.
ஒரு கட்டத்தில் பாரதியிடம் விஷத்தைத் தொடங்க, எதிரே துரை வந்து நிற்பது பார்த்து பயந்து அமைதியாகி விடுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய இதயம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் காண