Identity Documents Required For Casting Vote On Lok Sabha 2024


Identity Documents Required For Vote: தேர்தலில் வாக்களிக்க எந்த ஆவணங்களை அடையாளமாக பயன்படுத்தலாம் என்பது குறித்து தெரிந்து கொள்வோம். 
மக்களவை தேர்தல்:
இந்திய நாட்டில் 17வது மக்களவையின் காலமானது, வரும் ஜூன் 16-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் 18-வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் வகையில், தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 
இந்திய நாடு முழுவதும் நடைபெறவுள்ள தேர்தலானது, ஏப்ரல் 19 தேதி தொடங்கி, ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், 17 வது மக்களவைக்கான காலமானது முடிவதற்குள் முன்பாகவே, அடுத்த வரவிருக்கும்  18-வது மக்களவையை அமைப்பதற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்க தயாராக இருப்பார்கள். 
இந்த தருணத்தில் வாக்களிக்க தேவையான 11 ஆவணங்கள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
தேர்தல் நாளன்று வாக்களிக்கும் போது, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் கண்காணிப்பாளரிடம் காண்பிக்க வேண்டும். ஒருவேளை, உங்களிடம் வாக்காளர் அட்டை இல்லையென்றால், பின்வரும் 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அடையாள அட்டையாக பயன்படுத்தி கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
இதர 11 அடையாள ஆவணங்கள்:
1.கடவுச்சீட்டு ( பாஸ்போர்ட் )
2.ஓட்டுனர் உரிமம்,
3. மத்திய/மாநில அரசு/பொதுத்துறை நிறுவனங்கள்/பப்ளிக் லிமிடெட் நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சேவை அடையாள அட்டைகள்,
4. வங்கி/அஞ்சலகம் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக்குகள்,
5. பான் கார்டு,
6. NPR இன் கீழ் RGI வழங்கிய ஸ்மார்ட் கார்டு,
7. MNREGA வேலை அட்டை (100 நாள் வேலை என அழைக்கப்படுகிற அட்டை)
8. தொழிலாளர் அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு,
9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,
10. எம்பிக்கள்/எம்எல்ஏக்கள்/எம்எல்சிக்களுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள்
11. ஆதார் அட்டை.
இந்த 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தாலும், அதை அடையாள ஆவணமாக பயன்படுத்தி வாக்களிக்கலாம் 

Source link