<p>உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். </p>
<p>நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது. இதில் வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. அப்போட்டியில் ஆஸ்திரேலியா 172 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து அணி புள்ளிகள் இறக்கம் கண்டுள்ளது. அதனால் இந்திய அணி 64.58 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.</p>
<p> </p>
<p> </p>