ICC Test Team Of The Year: No Place For Rohit Sharma, Virat Kohli; Only 2 Indians Feature Australia-dominated

ஐ.சி.சி.யின் கனவு டெஸ்ட் அணி:
ஐ.சி.சி. வெளியிட்டுள்ள கனவு டெஸ்ட் அணியில் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா தொடக்க வீரராகவும், இலங்கை அணியைச் சேர்ந்த திமுத் கருணரத்னே இரண்டாவது வீரராகவும் இடம் பிடித்துள்ளனர்.  அதேபோல், மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன், நான்காவது இடத்தில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் மற்றும் ஐந்தாவது இடத்தில் ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா ஆறாவது இடத்திலும், விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி ஆகியோரும் எட்டாவது இடத்தில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸை டெஸ்ட் அணியின் கேப்டனாக ஐசிசி தேர்வு செய்திருக்கிறது. அதேபோல், இந்த அணியில் அஸ்வின், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
ஆனால், இதில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. அதற்கான காரணம் என்னவென்றால் கடந்த 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி இரண்டு சதம் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 55.70 சராசரியில் 557 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அதேநேரம்,  முதல் இடத்தில் இருக்கும் உஸ்மான் கவாஜா 1201 ரன்கள் குவித்திருக்கிறார். 
விராட் கோலிக்கு இடம் இல்லை:
அதேபோல், திமுத் கருணரத்னேவும் கடந்த 2023 ஆம் ஆண்டில் சிறப்பாக விளையாடியுள்ளார். அவர், 607 ரன்கள் எடுத்தன் மூலம் தான் இந்த பட்டியலில் இரண்டாவது வீரராக இடம் பிடித்துள்ளார். அதேபோல், அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் கேன் வில்லியம்சன் ஜோ ரூட் மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகியோருடன் ஒப்பிடுகையில் மிகக்குறைந்த சராசரியில் குறைவான ரன்களே விராட் கோலி எடுத்திருப்பதால் தான் ஐசிசியின் இந்த கனவு டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
ஆனால், ஐசிசி வெளியிட்டிருக்கும் ஒரு நாள் போட்டிகளுக்கான கனவு அணியில் விராட் கோலிக்கு இடம் கிடைத்திருக்கிறது. அதன்படி,  2023 ஆம் ஆண்டில் 27 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 72.47 என்ற சராசரியுடன்  99.13 ஸ்ட்ரைக் ரேட் எடுத்து ஆறு சதங்கள் மற்றும் எட்டு அரைசதங்கள் என மொத்தம் 1,377 விளாசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க: ICC ODI Team Of The Year: “ஆல் ஏரியாவுலயும் அண்ணன் கில்லிடா” ஐசிசியின் கனவு அணியின் கேப்டன் யார் தெரியுமா?
மேலும் படிக்க: ENG vs IND: இங்கிலாந்துக்கு எதிரான கோலி இல்லாத இந்திய அணி.. மாற்று வீரராக புஜாரா, ரஹானே திரும்புவது கடினம்!
 

Source link