காதலர் தினம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ரோஜாக்கள் என்றே கூறலாம். அதேபோல், உலக மலர் சந்தையில் தனக்கென தனி இடம் பதித்துள்ள ஓசூர் ரோஜா மலர்களே நினைவுக்கு வரும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பசுமை குடில்கள் அமைத்து சுமார் 2000 ஹேக்டர் நிலபரப்பலவில் கொய்மலர் சாகுபடி செய்துவரும் விவசாயிகள், அதிக அளவில் காதலர் தினத்திற்கு அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியாகும். தாஜ்மஹாலுக்கு செல்லகூடிய 15 முதல் 30 சென்டிமீட்டர் நீளமுள்ள சிவப்பு ரோஜாக்களுக்கு தனி சிறப்பு உண்டு, கொய்மலர் விவசாயிகள் அதிக அளவில் சிவப்பு ரோஜாக்களை சாகுபடி செய்து வருவது வழக்கம்.

கொரோனா காலக்கட்டத்தை தொடர்ந்து சில ஆண்டுகளாக கொய்மலர் சாகுபடியில் பெரும் நஷ்டத்தை சந்தித்து அதிலிருந்து மீண்டு, கடந்த ஆண்டு முதல் மீண்டும் கொய்மலர் விவசாயம் செழிக்க தொடங்கியது,

நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் 21 தேதி முதல் காதலர் தினத்திற்கான ரோஜா மலர் ஏற்றுமதி தொடங்கி இருப்பதாலும் அதேசமயம் விளை ஏற்றம் கண்டிருப்பதாலும் கொய் மலர் ரோஜா விவசாயிகள் ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபக்கம் உலக மலர் சந்தையில் ஓசூர் ரோஜா மலர்களுக்கு வரவேற்பு குறைந்து புது வகையான ஆப்ரிகா ரோஜாக்களுக்கு மவுசு உயர்ந்து வருவதால் இம்முறை ஏற்றுமதி குறைந்தே காணப்படுகிறது என்று ரோஜா ஏற்றுமதியாளர்கள் கூறி வருகின்றனர்.

ஏற்றுமதி குறைந்து இருப்பதால் வேதனை அடைந்துள்ளனர் என்றாலும், தற்போது தமிழகம், கர்நாடகம், தெலுங்கான, ஆந்திர, கேரள உள்ளிட்ட மாநிலங்களில் கல்யாண முகூர்த்தங்களும் சுப நிகழ்ச்சிகளும் அதிகமாகவுள்ளதால் உள்ளூர் சந்தைகளிலே ரோஜா மலர் ஒன்றுக்கு ரூ.16 முதல் 18 ரூபாய் வரை நல்ல விலை கிடைத்து வருவதாகவும் கொய்மலர் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

உலக சர்வதேச மலர் சந்தையில் மற்ற நாடுகளின் புது வரவு மலர்களால், தற்சமயம் பெரும் பின்னடைவு சத்தித்து வரும் ஓசூர் கொய் மலர் சாகுபடி புதுவகையான கொய் மலர் அறிமுகம் செய்தால் மட்டுமே உலக சர்வதேச மலர் சந்தையில் மீண்டும் ஓசூர் ரோஜாக்கள் தனக்கென தனி இடம் பிடிக்கும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்: அதுவே காலத்தின் கட்டாயமாகும்.

நன்றி: சி.முருகன் ஓசூர்-நிருபர்.