Helo India Youth Games 2024 Tournament Villupuram Girls Won The Silver Medal In The Mallarkambam Competition – TNN

6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு  போட்டியில், மல்லர்கம்பம் போட்டியில், தமிழ்நாடு மல்லர்கம்பம் விளையாட்டு வீரர்கள் குழு விளையாட்டு போட்டி மற்றும் தனிநபர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் பெற்றதையடுத்து, மல்லர்கம்பம் விளையாட்டு வீரர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனியிடம் பதக்கம் மற்றும் கோப்பையினை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
 
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுலக வளாகத்தில், 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2024 போட்டியில், மல்லர்கம்பம் போட்டியில், தமிழ்நாடு மல்லர்கம்பம் விளையாட்டு வீரர்கள் குழு விளையாட்டு போட்டி மற்றும் தனிநபர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் பெற்றதையடுத்து, மல்லர்கம்பம் விளையாட்டு வீரர்கள் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி, அவர்களிடம் பதக்கம் மற்றும் கோப்பையினை இன்று (25.01.2024) காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்தியா அளவில் தேசிய விளையாட்டு போட்டிகளை நடத்தும் மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சகத்தின் கேலோ இந்தியா அமைப்பின் 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் 2024 போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஜனவரி 19 அன்று தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
 
ஜனவரி 21 தொடங்கி 24 வரை நான்கு நாட்கள் திருச்சியிலுள்ள தமிழ்நாடு விளையட்டு மேம்பாட்டு ஆணையத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர்களுக்கான மல்லர்கம்பம் விளையாட்டு போட்டியில் 22 மாநிலங்களை சார்ந்த 200க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கு பெற்றனர். விழுப்புரத்தை சேர்ந்த மதிவனி, பூமிகா, சங்கீதா, மற்றும் பாலாஜி ஆகியோர்கள் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு மல்லர்கம்பம் விளையாட்டு வீரர்கள் அணியானது, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குழு விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கமும், செல்வி. பூமிகா அர்கள் மல்லர்கம்பம் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்ந்துள்ளார்கள். விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயகுமாரி அவர்கள் அணி மேலாளராகவும், ஆண்கள் அணி பயிற்றுநராக நடராஜன் மற்றும் பெண்கள் அணி பயிற்றுநாரக திரு.ஆதித்தன் அவர்களும் சென்றனர்.
 
வெற்றி பெற்ற மல்லர்கம்பம் விளையாட்டு வீரர்கள் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி அவர்களிடம் பதக்கம் மற்றும் கோப்பையினை காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அரிதாஸ், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது, நகராட்சி ஆணையர் ரமேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயகுமாரி, விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் கிருஷ்ணதாஸ், மல்லர்கம்பம் நிறுவனர் உலக துரை உட்பட பலர் உடனிருந்தனர்.

Source link