அரசின் அனுமதி இன்றி தனியார் நிறுவனம் தொடங்கி மோசடியில் ஈடுபட்டதாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு டிசம்பர் 26 ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே உள்ள நிலையில் பதிவாளர் தங்கவேல், பேராசிரியர்கள் சதீஷ், ராம், கணேஷ் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர். இதனையடுத்து பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஏழு இடங்களில் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி 21 மணி நேரத்துக்கு மேலாக சேலம் மாநகர காவல் துறை சோதனை நடத்தினர். மேலும் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ஜெகன்நாதன் மீது முறைகேடு புகார் தொடர்பான விசாரணை நாளை உயர்நீதிமன்றத்தில் வர உள்ளது.

இந்நிலையில் பெரியார் பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து சேலத்திற்கு விமானம் மூலம் வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவி பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்தார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனையடுத்து பல்கலைக்கழகத்தின் உள்ளே சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது நிலவி வரும் சூழ்நிலை குறித்து பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஆலோசனை நடத்தினார். 30 நிமிடங்களுக்கும் மேலாக ஆளுநரும், துணைவேந்தர் ஜெகநாதன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக அனைத்து துறைத் தலைவர்களுடன் தமிழக ஆளுநர் ரவி ஆலோசனை நடத்தினார். 15 நிமிட ஆலோசனைக்கு பின்னர் அங்கிந்து புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி கார் வாயிலாக கோவை புறப்பட்டுச் சென்றார் உள்ளார். ஆளுநர் வருகைக்காக 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழா, தேசிய அளவிலான மற்றும் மாநில அளவிலான நிகழ்ச்சிகளில் பங்கேற்க மட்டுமே இதுவரை ஆளுநர் வந்த நிலையில் தற்போது எந்தவொரு நிகழ்ச்சியும் இல்லாமல் ஆளுநர் பல்கலைக்கழகத்திற்கு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க நேரில் வந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் 7 இடங்களில் சேலம் மாநகர காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பெரியார் பல்கலைக்கழக நிதித்துறை அலுவலகம், தமிழ்த்துறை, உள் தர மதிப்பீட்டு மையம், தீன் தயாள் உபாத்தியாயா பயிற்சி மைய வளாகம், பியூட்டர் பவுண்டேஷன் உள்ளிட்ட 7 இடங்களில் சேலம் மாநகர காவல் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.