Governor rn ravi said Caldwell wrote comparative grammar of the South Indian language bookm is fake | ஜி.யூ.போப், கால்டெவெல் வந்ததே மதம் மாற்றம் செய்யத்தான்; அந்த நூல் போலியானது


ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகா விஷ்ணுவின் அவதாரம் மற்றும் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனாதன வரலாறு என்ற புத்தகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார். அப்போது பேசிய ஆளுநர்,
மதமாற்றம்:
ஜி.யூ.போப், கால்டுவெல் போன்றோர்கள் இந்தியாவுக்கு வந்ததே மதம் மாற்றம் செய்யத்தான்.  இவர்கள், பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்கள். கால்டெவெல் எழுதிய திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் போலியானது. இயேசுவும் பைபிளும் எனக்கு பிடிக்கும்.
இந்திய மக்கள் சனாதனத்தின் அடிப்படையில் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். ஆங்கிலேயர்கள், இந்தியாவில் தர்மத்தை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தியர்களின் ஒற்றுமை இந்தியர்களுக்கு மிகவும் சவாலாக அமைந்தது.
ஆளுநர் ரவி, அய்யா வைகுண்டர் அவதார தினத்தின் 192வது பிறந்தநாளை  கொண்டாடும் நிகழ்வில் மேலும் பேசியதாவது, அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்துக்கு புத்துயிரூட்டி, பெரிதும் வளப்படுத்தினார். சமூக பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடி, விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமூக நீதியை உறுதி செய்தார். அவர் கொண்டிருந்த பார்வை, அனைவருக்கும் சமமான நலத்திட்ட அணுகலையும் திட்டங்கள் அனைவருக்குமானது என ஒருவரைக் கூட விட்டு விடாமல் உறுதிப்படுத்தும் என ஆளுநர் தெரிவித்தார்.

ஆளுநர் ரவி அவர்கள், மகான் அய்யா வைகுண்டர் அவதார தினத்தின் 192வது பிறந்தநாளை கொண்டாடும் நிகழ்வில், சனாதன தர்மத்தை அதை அழிக்க சதி செய்தவர்களிடமிருந்து பாதுகாப்பதில் அய்யா வைகுண்டர் வழங்கிய ஆழமான பங்களிப்பை நினைவுகூர்ந்தார். அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்துக்கு புத்துயிரூட்டி,… pic.twitter.com/SU81j1TQqq
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) March 4, 2024

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்துக்கு விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன. ஏற்கனவே திருவள்ளுவருக்கு காவி உடை உள்ளிட்ட சர்ச்சைகள் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், புதிதாக கால்டுவெல், ஜி.யூ.போப் தொடர்பாக தெரிவித்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
Also Read: PC Sreeram: நீங்க பண்ணது சரியே இல்ல.. ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்த பி.சி.ஸ்ரீராம்!

மேலும் காண

Source link