GOAT Movie Cinematographer Siddhartha Nuni talk about working with vijay


கோட் படத்தில் நடிகர் விஜய்யுடன் பணியாற்றும் அனுபவத்தை பகிர்ந்துள்ளார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நூனி
சித்தார்த்தா நூனி
தமிழ் சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளராக உருவெடுத்து வருகிறார்  சித்தார்த்தா நூனி. இந்தி மற்றும் கன்னட சினிமாவில் ஒளிப்பதிவாளராக தனது பயணத்தை தொடங்கினார். கன்னடத்தில் பவன் குமார் இயக்கிய லூசியா மற்றும் யு டர்ன் படங்களில் இவரது வேலை பரவலாக கவனம் பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழில் கெளதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில் சித்தார்த்தா நூனியின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. தற்போது விஜய் நடித்து வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்
சமூக நிகழ்வுகள் குறித்த தனது கருத்துக்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார் சித்தார்த்தா நூனி . இந்தியில் வெளியாகிய அனிமல் படம் பற்றிய இவரது விமர்சனம் கவனம் பெற்றது. -“இந்த மாதிரியான ஒரு படம் சமூகத்தில் மனநோயாளிகளையே உருவாக்கும், படைப்பாளிகள் பொறுப்புடன் படங்களை எடுக்க வேண்டும்” என்று அவர் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஏன் ஸ்டெடிகேம் பயன்படுத்துகிறேன்
கேப்டன் மில்லர் படம் வெளியானபோது படத்தில் பல் காட்சிகள் நிலையாக இல்லாமல் ஆடியபடி இருந்ததாக பார்வையாளர்கள் தெரிவித்திருந்தார்கள். சில ரசிகர்கள் இதனால் எரிச்சலடைந்திருந்ததாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்கள். இதுபற்றி சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பதில் அளித்துள்ளார் சித்தார்த்தா நூனி. “எனக்கு கேமராவை நிலையாக ஒரு இடத்தில் வைக்காமல் ஸ்டெடிகேம் (கையில் பிடித்து படம்  பிடிப்பது) பயன்படுத்த பிடிக்கும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் லை செய்யாமல் அந்த ஒட்டுமொத்த இடத்தையும் லை செய்வேன். அப்போது தான் நடிகர்களால் சுதந்திரமாக நடமாடி நடிக்க முடியும். அந்த மாதிரியான நேரங்களில் ஸ்டெடி கேம் வைத்திருப்பது நடிகர்களை பின்தொடர்வது எளிமையாக இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.
எந்த கேரக்டர் கொடுத்தாலும் அவரால் நடிக்க முடியும்
இதே நேர்காணலில் நடிகர் விஜய்யுடன் பணியாற்றும் அனுபவத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார். “விஜய் ஒரு நல்ல நடிகர் மட்டுமில்லை, அவரால் எந்த கதாபாத்திரம் தனக்கு கொடுக்கப்பட்டாலும் அதை சிறப்பாக நடிக்க முடியும். கோட் படத்தில் விஜய்யின் காட்சியை படம்பிடிக்கும்போது அவருடைய திறமையை, கச்சிதமாக படம்பிடிக்க நான் முயற்சி செய்திருக்கிறேன். கேப்டன் மில்லர் படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது விஜய் எனக்கு ஃபோன் செய்து என்னைப் பாராட்டினார். இணைந்து வேலை செய்வதற்கு மிகவும் எளிமை மற்றும் கனிவான ஒரு மனிதர் விஜய்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க : Poonam Pandey: “நான் இன்னும் சாகல”..வீடியோ வெளியிட்ட பூனம் பாண்டே.. அதிர்ந்து போன திரையுலகினர்!

மேலும் காண

Source link