Gangai Amaran: "இசையமைப்பாளர் தீனா ஒரு எச்சக்கல" லோக்கலாக இறங்கி திட்டிய கங்கை அமரன்

இசையமைப்பாளர் தீனா ஒரு எச்சக்கல என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் கடுமையாக பத்திர்கையாளர் முன்னிலையில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திரைப்பட இசையமைப்பாளர் சங்கத் தேர்தல்

திரைப்பட இசையமைபபளர் சங்க தேர்தல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், இதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. இதுவரை வாக்கு உரிமை இல்லாத அசோசியேட் உறுப்பினர்களுக்கு வாக்குரிமை வழங்கப் பட்டதைத் எதிர்த்து  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் திரைப்பட இசையமைப்பாளர் சங்க தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க உத்தரவிட்டது.

இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்து தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்தது. இப்படியான நிலையில் இன்று பிப்ரவரி 18 ஆம் தேதி திரைப்பட இசையமைப்பாளர் சங்க தேர்தல் நடைபெற்றது.

இசைக்கலைஞர்கள் சங்கத்தின் அலுவலக கட்டிட வளாகத்திற்குள் இந்த தேர்தல் நடைபெறும் என இந்த சங்கத்தின் தலைவர் தீனா தெரிவித்தார். இசையமைப்பாளரான தீனா இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

கங்கை அமரன் குற்றச்சாட்டு

இந்த தேர்தல் குறித்து வடபழனி திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க கட்டிடத்தில்  இசையமைபபாளர் கங்கை அமரன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் “ தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட முதல் சங்கம் இது தான். இதற்கு பிறகு தான் மற்ற சங்கம் எல்லாம் உருவாகின.  அப்போது எல்லாம் தினம் சம்பளம் கிடையாது, இந்த சங்கத்தில் இருந்தவர்கள் போராடி வாங்கிக் கொடுத்தார்கள், அவர்களின் கருணையால் நாங்கள் இன்று நன்றாக இருக்கிறோம் .

அவர் மட்டும் தான் ஆள வேண்டுமா?

தொடர்ந்து பேசிய  அவர் இசையமைபபாளர் தீனா மிது சில குற்றச் சாட்டுக்களை வைத்துள்ளார். ”இளையராஜா வந்து உட்கார்ந்து வந்து உட்கார்ந்திருக்க வேண்டிய இடம் இது. எங்கள் வீட்டில் நடந்த துக்க நிகழ்வைப் பற்றி உங்களுக்குத் தெரியும். அவருக்கு பதிலாக இந்த இடத்தில் நான் வந்து உட்கார்ந்திருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

இந்த சங்கத்தின் விதிமுறைப் படி ஒருவர் அதிகபட்சம் இரண்டு வருட காலம் தங்களது பதவியை நீடித்துக் கொள்ளலாம். இந்த சங்கத்தை தொடர்ந்து ஆண்டவர்கள் யாரும் இல்லை. ஆனால் தீனா தனது செல்வாக்கை பயன்படுத்தி தனது பதவியை 4 ஆண்டுகள் தக்கவைத்துக் கொண்டு இந்த ஆண்டும் போட்டி போடுகிறார். இது என்ன அரசியல் கட்சியா? தலைவர் என்கிற பதவியை எல்லாரும் இருந்து அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதே எங்கள் அனைவரது கருத்தாகவும் இருக்கிறது.” என்று கூறினார்

தீனா ஒரு எச்சக்கல

”கொரோனா காலத்தில் இந்த சங்கத்தில் பல்வேறு தவறான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. கொரோனா காலத்தில் பணம் கேட்டு பல இசைக்கலைஞர்கள் கையெழுத்து போட்டதாக மோசடி செய்யப்பட்டுள்ளது. அதில் பவதாரிணியின் கையெழுத்தை போட்டுகூட பணம் வாங்கப் பட்டுள்ளது, கிட்டதட்ட 80 லட்சம் வரை மோசடி செய்யப் பட்டுள்ளது.

இந்த உண்மைகளை வெளியே தெரியாமல் இருக்கத்தான் இப்போது மீண்டும் தலைவராக தீனா முயற்சி செய்கிறார். இளையராஜா நம்மை எல்லாரையும் வளர்த்துவிட்டவர். அவர் சொல்லியும் தீனா கேட்பதாக இல்லை, இளையராஜாவை மதிக்காதவர் எங்களுக்கு தேவையில்லை. தீனா ஒரு எச்சகல என்று தான் சொல்ல வேண்டும்” என்று கங்கை அமரன் ஆவேசமாக பேசியுள்ளார்.

Source link