Former Pakistan Prime Minister Imran Khan and his wife have been sentenced to 14 years in prison in a corruption case.


தோஷ்கானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு (Imran Khan) 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான். அரசியல்வாதியும் கூட.  கடந்த 1996-ம் ஆண்டில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை (Pakistan Tehreek-e-Insaf (PTI) ) தொடங்கினார்.  2018-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இவர் தலைமையிலான கட்சி ஆட்சியைப் பிடித்தது. நாட்டின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். ஆனால், அவரால் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியவில்லை. விலைவாசி உயர்வு,  கடும்  பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை சந்தித்தது பாகிஸ்தான். நாடே நெருக்கடியான நிலையில் இருந்தபோது, இம்ரான் கான் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் திரும்ப பெற்றன. இதனால், 2022 ஏப்ரலில் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது.
இதையடுத்து இம்ரான் கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. நில மோசடி, தோக்ஷகானா எனும் கருவூல ஊழல், அரசு ரகசியங்களை கசியவிட்டது, அரசு சொத்துகளை தவறாக பயன்படுத்தியது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதில் பிரதமராக இருந்தபோது தனக்கு பரிசாக வந்த பொருட்களை அவர் கருவூலத்தில் வழங்காமல் பயன்படுத்தியது தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு கடந்த வருடம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு இந்த தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.  இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தீர்ப்பின் மூலம் இம்ரான் கானுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தோஷ்கானா வழக்கில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி 10 ஆண்டுகள் பொது பதவியில் இருக்கக்கூடாது என்றும், அந்நாட்டு பணத்திற்கு 787 மில்லியன் (சுமார் 23 கோடி) அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 

மேலும் காண

Source link