Flag hoisting ceremony at Sri Kalyana Pasupadeeswarar Temple in honor of Panguni Uttram | பங்குனி உத்திரம்! கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்ற விழா


கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொடிமரத்தில் பஞ்ச மூர்த்தி சுவாமிகள் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
 

பங்குனி உத்திரம்:
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வாகஆலய கொடிமரத்தில் கொடியேற்ற விழா சிறப்பாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை ஆலய நடை திறக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக விநாயகர் ,வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக சுவாமி மற்றும்  ஸ்ரீ அலங்கார வள்ளி ,  ஸ்ரீ சௌந்தரநாயகி,  ஸ்ரீ பசுபதீஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்து பின்னர் ஆலயத்தின் சிவாச்சாரியார்கள் பிரத்தியேக யாகசாலை அமைத்து யாக வேள்வி நடத்தினர்.

சிறப்பு அபிஷேகம்:
அதைத் தொடர்ந்து யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தை ஆலய கொடிமரத்தில் சிறப்பு அபிஷேகம் நடத்தி அதன் தொடர்ச்சியாக கொடி மரத்திற்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து, சந்தன பொட்டிட்டு, மேள தாளங்கள் முழங்க கொடியேற்ற விழா சிறப்பாக தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக கொடி மரத்திற்கு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன், மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத உத்தரத்தை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்ற விழா நிகழ்ச்சியை காண கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

வீதி உலா:
பங்குனி உத்திர கொடியேற்ற விழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி திருவீதி விழா நடைபெற உள்ளது . அதிலும் குறிப்பாக ஸ்ரீ விநாயகர்,  ஸ்ரீ வள்ளி,  ஸ்ரீ தெய்வானை சமேத  ஸ்ரீ ஆறுமுக சுவாமி,  ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி, ஸ்ரீ  கல்யாண பசுதீஸ்வரர் (பஞ்சமூர்த்தி) திருவீதி உலா மாலை நடைபெற உள்ளது. அதன் தொடர்ச்சியாக சுவாமி முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு இரவு ஆலயம் குடி புகுவார். இந்த சிறப்பு நிகழ்ச்சியின் ஏற்பாட்டையும் ஆலய சிவாச்சாரியார்கள் மற்றும் ஆலய நிர்வாகிகள் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 

மேலும் காண

Source link