Fighter Song Heer Aasmani Is Out Hrithik Roshan Deepika Padukone Song Serves As Powerful Tribute To Iaf Officers

ஃபைட்டர் படத்தின் ‘ஷேர் குல் கயே’ (Sher Khul Gaye) மற்றும் ‘இஷ்க் ஜெய்சா குச்’ (Ishq Jaisa Kuch) ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்த பாடல்களில் நடிகர் ஹிருத்திக் ரோஷன், தனது அசாத்திய நடன அசைவுகளால் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்தார்.
ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டர் படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது:
இந்த நிலையில், ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டர் படத்தின் மூன்றாவது பாடலான ஹீர் ஆஸ்மானி (Heer Aasmani) வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த பாடல் விமானப்படை விமானிகளின் வாழ்க்கை, அவர்களின் தினசரி பணி பற்றி எடுத்து கூறுகிறது.  ‘ஹீர் ஆஸ்மானி’ பாடல் ஹிருத்திக் ரோஷனின் கதாபாத்திரத்தை அனைத்து விதத்தில் இருந்தும் வெளிப்படுத்துகிறது. அவர் ஸ்க்வாட்ரான் லீடர் ஏஸ் ஃபைட்டர் ஜெட் பைலட் ஷம்ஷர் பதானியா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 

விமானம் ஓடுபாதையில் செல்ல தயாராகும் போது என்ன என்ன வேலைகளை பைலட் செய்கிறார் என்பது பாடலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஹீர் ஆஸ்மானி பாடல் விமானப்படை விமானிகளின் தினசரி வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. படத்தில் ஹிருத்திக் ரோஷனின் கூட்டாளிகளாக வரும் தீபிகா படுகோன், கரண் சிங் குரோவர், அக்‌ஷய் ஓபராய் ஆகியோரைக் கொண்ட ஏர் டிராகன் அணிக்குள் நடக்கும் அன்றாட வேலைகளை ஹீர் ஆஸ்மானி பாடல் எடுத்து கூறுகிறது.
இந்திய விமானப்படை வீரர்களுக்கு  ட்ரிப்யூட்டாக அமைந்த பாடல்:
பி ப்ராக்கின் கடினமான பாடல் வரிகள் மற்றும் குரல்களுடன் இணைந்து, இந்த ஹீர் ஆஸ்மானி ஒரு இனிமையான மெல்லிசையாக வெளியாகியுள்ளது. தீம் பாடலையும் கொண்டுள்ளது. ஃபைட்டரின் சமீபத்திய புரமோசனல் பாடலான ‘இஷ்க் ஜெய்சா குச்’ (Ishq Jaisa Kuch) மூலம் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது அசாத்திய நடன திறமையை மீண்டும் வெளிப்படுத்தி இருந்தார்.  ஹிருத்திக் ரோஷனின் மறக்கமுடியாத ஹூக் ஸ்டெப் நடன அசைவுகள், ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

ஃபைட்டர் படம் இந்தியாவின் 75வது குடியரசு தினத்தன்று 2024 ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது. மேலும் இப்படம் 3டியில் வெளியாகும் ஹிருத்திக் ரோஷனின் முதல் படமாகும்.
 

Source link