Fahadh Faasil discloses his interest acting in love films like mouna ragam


மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான திறமையான இயக்குநராக இன்றும் தன்னுடைய படங்கள் மூலம் கொண்டாடப்படுபவர் இயக்குநர் பாசில். அவரின் மகன் ஃபகத் பாசிலும் இன்று தென்னிந்திய நடிகராக மிகவும் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். ஆரம்பகாலகட்டங்களில் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தன்னுடைய திறமையை மேலும் மேலும்  மெருகேற்றி இன்று அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு மல்டி ஹீரோவாக வலம் வருகிறார்.

ஈர்க்கக்கூடிய நடிகர் :
சின்னச்சின்ன முகபாவனைகள், அலட்டல் இல்லாத நடிப்பு, கேரக்டருக்கு ஏற்ற பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி, கண்களால் நடிப்பை வெளிப்படுத்துதல் என தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் மாறுபாடு காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மலையாளம் மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் உயிர்கொடுத்து பார்வையாளர்களுக்கு அந்த கேரக்டர் மீது ஒரு தனி ஈர்ப்பு ஏற்படுத்தும் வகையில் நடிப்பது அவரின் தனி சிறப்பு.
நடிப்பால் செதுக்குபவர் :
ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான வேலைக்காரன், விக்ரம், மாமன்னன், புஷ்பா உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். விக்ரம் படத்தில் ஏஜென்ட் அமீரக ரசிகர்களின் கவனம் பெற்று பாராட்டுகளை குவித்தார். மாமன்னன் படத்தில் சாதி வெறி பிடித்த அரசியல்வாதியாக ரத்னவேல் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலான வில்லனாக நடித்திருந்தார். இப்படம் அவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது. புஷ்பா படத்தில் பன்வர்சிங் ஷெகாவத் என்ற கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுனுக்கு டஃப் கொடுக்கும் வில்லனாக மிரட்டி இருப்பார். 
2024 லைன் அப் :
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ஆவேஷம் திரைப்படத்தில் ரங்கா என்ற கதாபாத்திரத்தில் கேங்ஸ்டராக நடித்து பாராட்டுகளை குவித்தார். தற்போது ரஜினியுடன் வேட்டையன், அல்லு அர்ஜுனுடன் புஷ்பா 2 , வடிவேலுவுடன் மாரீசன், கராத்தே சந்திரன் உள்ளிட்ட பல படங்கள் வெளியாக தயாராகி வருகின்றன. இது தவிர வேறு சில படங்களிலும் கமிட்டாகி உள்ளார். 2024ல் கைவசம் ஏராளமான லைன் அப் வைத்துள்ளார் ஃபகத் பாசில். 

காதல் படத்தில் விருப்பம் :
இந்நிலையில் சமீபத்தில் ஃபகத் பாசில் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் காதல் படங்களில் நடிப்பது குறித்து தனக்கு இருக்கும் விருப்பம் பற்றி தெரிவித்திருந்தார். மௌன ராகம் போன்ற ஒரு காதல் படத்தில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். ரசனை என்பது மிகவும் முக்கியமானது. இந்த காலகட்டத்தில் அப்படி ஒரு திருமண வாழ்க்கை என்பது பயங்கரமாக மாறியுள்ளது. இது குறித்து நான் ஆலோசிக்க விரும்புகிறேன் என கூறி இருந்தார் ஃபகத் பாசில். அவரின் ரொமான்ஸ் வெர்ஷன் எப்படி இருக்கும் என்பதையும் ரசிகர்கள் பார்க்க விரும்புகிறார்கள். 

மேலும் காண

Source link