Everest MDH Masala Ban in Hong Kong Singapore Due To Cancer Causing Chemicals Spice Brands


இந்தியாவின் எம்.டி.ஹெச். மற்றும் எவரேஸ்ட் ஆகிய நிறுவனங்களின் மசாலாப் பொருட்களில் உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எத்திலீன் ஆக்ஸைடு என்ற பூச்சிக்கொல்லி சேர்க்கப்பட்டிருப்பதால் சிங்கபூர், ஹாங்-காங் ஆகிய நகரங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. 
இந்திய மசாலா தயாரிப்பு நிறுவனங்களாக எம்.டி.ஹெச். ( MDH Pvt.) எவரெஸ்ட் ( Everest Food Products Pvt) ஆகியவை தயாரித்த மசாலாப் பொருட்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் எத்திலீன் ஆக்ஸைடு (ethylene oxide) என்ற பூச்சிக்கொல்லி அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 
சிங்கப்பூரில் மீன் குழம்பு மசாலாவிற்கு தடை 
சிங்கப்பூர் உணவு முறை எவரெஸ்ட் மீன் குழம்பு மாசாவில் அதிகளவு பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டறிந்தவுடன், அதன் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. மேலும், எவரெஸ்ட் மசாலாப் பொருட்களை கொள்முதல் செய்யவும் தடை விதித்திருக்கிறது. இது தொடர்பாக சிங்கபூர் அரசு தெரிவித்துள்ள விளக்கத்தில், ‘ எத்திலீன் ஆக்ஸைடு உணவில் பயன்படுத்த அனுமதியில்லை. இது விவசாயப் பொருட்களுக்கு கிருமிநீக்கம் செய்யப்படும் ரசாயனம். எனவே, மக்கள் யாரும் இதை சமையலில் உபயோகிக்க வேண்டாம். இது உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளது.
சந்தையில் உள்ள எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலா பாக்கெட்கள் அனைத்தையும் திரும்ப பெறுமாறு அந்நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
ஹாங்காங் 
கடந்த வாரம் சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டது. அடுத்து, ஹாங்காங் நகரிலும் எம்.டி.ஹெச். மெட்ராஸ் சாம்பார் மசாலா, Curry மசாலாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 ஹாங்காங் சந்தையில் விற்பனை செய்யப்பட்டும் எம்.டி.ஹெச். மெட்ராஸ் Curry மசாலா, சாம்பர் மசலாம், Curry பவுடர் உள்ளிட்டவற்றில் அதிகமாக எத்திலீன் ஆக்ஸைடு இருப்பதை ஹாங்காங் உணவுப் பாதுகாப்பு துறை சோதனையில் கண்டறிந்துள்ளது (The Centre For Food Safety of The Government). 
இது தொடர்பாக ஹாங்காங் உணவுப் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,” Tsim Sha Tsui  பகுதியில் உள்ள மூன்று கடைகளில் இருந்து பெறப்பட்ட மசாலாப் பொருட்களை பரிசோதனைக்கு உட்படுத்தினோம். அதில் பூச்சிக்கொல்லி கலக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இது மக்களின் உடல்நலனுக்கு கேடு என்று அறிந்ததும் அதன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் எத்திலீன் ஆக்சைட் வேதிப்பொருளை குரூப் 1 கார்சினோஜென் என்ற பிரிவில் வைத்துள்ளது. இதனால் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது.”என்று தெரிவித்துள்ளது. 
எத்திலீன் ஆக்ஸைடு என்றான் என்ன? 
எத்திலீன் ஆக்ஸைடு (Ethylene oxid) என்பது ஓர் நிறமற்ற, எரியக்கூடிய வாயு. இது மற்ற வேதிப்பொருட்கள் கிடைப்பதற்கு குறிப்பிட்ட அளவில் சேர்க்கப்படுகிறது. ’antifreeze’ எனப்படும் வாகன எஞ்ஜின்களின் தட்பவெப்பநிலையை சீராக இயங்க உதவும் ஆயில்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. 
குறிப்பிட்ட அளவில் பயன்படுத்தப்பட்டால் விவசாயப் பொருட்களின் பூச்சுக்கொல்லியாக செயல்படும். கருத்தடை மருந்துகள் தயாரிப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது. 
எத்திலீன் ஆக்ஸைடு மனிதனின் நரம்பியல் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை பாதிக்கும். மேலும், புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை கொண்டிருக்கிறது. மனிதர்கள் உண்ணும் உணவில் இதை சேர்ப்பது ஆபத்தானது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எவரெஸ்ட் நிறுவனம் விளக்கம்
எவரெஸ்ட் நிறுவனம் Wion என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்த விளக்கத்தில், நாங்கள் 50 ஆண்டுகால புகழ், பாரம்பரிய மிக்க ப்ராண்ட். எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் ஆய்வுக் கூடங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பப்படும். தூய்மை மற்றும் உணவு பாதுகாப்பு ஆகிய இரண்டையும் உறுதி செய்த பிறகே எங்கள் தயாரிப்புகள் வெளிவருகின்றன; ஏற்றுமதி செய்யப்படுகின்றன.எங்கள் தயாரிப்புகளுக்கு இந்திய ஸ்பைஸ் போர்டு (Indian Spice Board) மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) ஆகியவற்றின் அனுமதி பெற்றுள்ளது. ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன்பு எங்களது தயாரிப்புகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்கிறோம். எங்கள் தரக்கட்டுப்பாட்டு குழு இந்த விஷயத்தை முழுமையாக ஆய்வு செய்யும்” என எவரெஸ்ட் நிறுவனம் கூறியுள்ளது. 
2023-ம் ஆண்டும் எவரெஸ்ட் நிறுவனம் தயாரித்த பொருட்களில் அதிகளவு ரசாயனம் இருந்ததால் ’Salmonella’ பாதிப்பு ஏற்பட்டபோது அமெரிக்கவில் எவரெஸ்ட் மசாலா பொருட்கள் பயன்படுத்த வேண்டாம் அந்நாட்டின் பாதுகாப்பு துறை தெரிவித்திருந்தது.
உணவுப் பொருட்களில் குறிப்பிட்ட அளவே எத்திலீன் ஆக்ஸைடு பயன்படுத்தப்பட்டாலும் அதை தொடர்ந்து பயன்படுத்தினால் உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும். புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயமும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும் காண

Source link