DON’T PANIC Bengaluru: “தண்ணீர் இருக்கு..கவலைப்படாதீங்க” – பெங்களூரு மக்களுக்கு கிடைத்த நற்செய்தி!


<p>பெங்களூருவில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.&nbsp;</p>
<p>பெங்களூரு நகரத்தின் குடிநீர் வழங்கல் வாரியத்தின் &nbsp;தலைவர் ராம்பிரசாத் மனோகர் கூறுகையில், &ldquo;ஜூலை மாதம் வரை நகரில் விநியோகிக்க போதுமான தண்ணீர் தங்களிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது. பெங்களூரு முழுவதும் தினமும் 1,470 மில்லியன் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை. மேலும் வரும் மே 15 ஆம் தேதி காவிரி ஐந்தாம் கட்டத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால் அதன் பிறகு பெங்களூருவுக்கு கூடுதலாக 775 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கும்&rdquo; எனவும் தெரிவித்துள்ளார். நகரின் தற்போதைய தண்ணீர் தேவை &nbsp;2,100 மில்லியன் லிட்டர் ஆக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.&nbsp;</p>

Source link