Donald Trump: நேற்றைய வர்த்தகத்தின் நிறைவில் டிரம்புக்கு சொந்தமான நிறுவனங்களில் பங்குகளின் மதிப்புகள் உச்சத்தை எட்டியுள்ளது.
உலக பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்:
உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்த ஆளப்போவது யார் என்பது உலக நாடுகள் மத்தியில் கேள்வியாக எழுந்துள்ளது. வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அமெரிக்க அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.
அனைவரும் எதிர்பார்த்தது போல், அமெரிக்க அதிபர் பைடன், முன்னாள் அதிபர் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட பைடனுக்கும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட டிரம்புக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க அதிபார் டிரம்ப் மீது நிதி மோசடி வழக்குகள் உள்ளது. தொழில் அதிபரான டிரம்ப் வங்கி, நிதி அமைப்புகளிடம் கடன் வாங்குவதற்காக தனது சொத்து மதிப்புகளை உயர்த்தி காட்டி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது.
இத்ந வழக்கில் 500 மில்லியன் டாலர் செலுத்த வேண்டும் என்று நியூயார்க் நீதிமன்றம் டிரம்புக்கு உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்தபோது 175 மில்லியன் டாலர் செலுத்தினால் போதும் என்று நீதிமன்றம் உறுதிவிட்டது.
சொத்து மதிப்பு எவ்வளவு?
இப்படியான சூழல்களில் டொனால்டு டிரம்ப்பின் சொத்து மதிப்பு குறையும் என்று எதிர்பாக்கப்பட்டது. ஆனால், நேற்றைய வர்த்தகத்தின் நிறைவில் டிரம்புக்கு சொந்தமான நிறுவனங்களில் பங்குகளின் மதிப்புகள் உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது, டொனால்டு டிரம்பின் நிகர மதிப்பு நேற்றைய வர்த்தகத்தின் நிறைவில் 4 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில், 6.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதன்முதலாக உலகின் பணக்கார பட்டியல்களில் 500 நபர்களின் வரிசையில் இணைந்துள்ளார் டிரம்ப்.
உலகின் முதல் 10 பணக்காரர்கள் லிஸ்ட்:
பெர்னார்ட் அர்னால்ட் (235 பில்லியன் டாலர்)
ஜெஃப் பெசோஸ் (192 பில்லியன் டாலர்)
எலான் மஸ்க் (1888 பில்லியன் டாலர்)
மார்க் ஜுக்கர்பெர்க் (169 பில்லியன் டாலர்)
லாரி எலிசன் (154 பில்லியன்டாலர்)
வாரன் பஃபெட்(154 பில்லியன் டாலர்)
பில் கேட்ஸ் (129 பில்லியன் டாலர்)
ஸ்டீவ் பால்மர்(123 பில்லியன்டாலர்)
லாரி பைஜ் (118 பில்லியன்டாலர்)
முகேஷ் அம்பானி (113.9 பில்லியன் டாலர்)
மேலும், 11 ஆம் இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி தற்போது 113 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 10ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி 15ஆம் இடத்திலும் உள்ளனர். கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 97 பில்லியன் டாலராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Baltimore Bridge Collapse: கப்பல் மோதி உடைந்த பாலம்.. ஆற்றுக்குள் கவிழ்ந்த கார்கள்.. அமெரிக்கவில் சோகம்..
மேலும் காண