ACTP news

Asian Correspondents Team Publisher

Dogs Attack: சுற்றிவளைத்த தெரு நாய்கள்! 2 வயது குழந்தை மரணம்.. டெல்லியில் அதிர்ச்சி!

நாட்டில் சமீபகாலமாக தெருநாய்கள் கடித்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. முதலில் இந்த சம்பவம் கேரளாவில் அதிகளவில் இருந்தது. அதனை தொடர்ந்து தெலங்கானா, கர்நாடகா, மும்பை, டெல்லி என பல்வேறு பகுதியில் தெருநாய்கள் குழந்தைகளை கடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

2 வயது குழந்தை உயிரிழப்பு:

இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது கொடூர சம்பவம் தலைநகர் டெல்லியில் அரங்கேறியுள்ளது.  அதாவது, டெல்லியில் நாய் கடித்து 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்து.

டெல்லியின் துக்லக் லேனில் உள்ள தோபிகாட் பகுதியில் தெருவில் 2 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, 2 வயது சிறுமியை நான்கு நாய்கள் சுற்றி வளைத்து கொடூரமாக கடித்திருக்கிறது.  பின்னர், குழந்தையை 100 அல்லது 150  மீட்டர் வரை நாய்கள் இழுத்து சென்று கடுமையாக கடித்திருக்கிறது.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். இதனை அடுத்து, அவர்கள் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது, குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டு தெருவில் கிடந்துள்ளார்.   இதனை அடுத்து, காயம் அடைந்த 2 வயது குழந்தைகயை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில்  2 வயது குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

100 மீட்டர் வரை குழந்தையை இழுத்த சென்ற கொடூரம்:

உயிரிழந்த தந்தை ராகுல். இவர் சலவை தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். சம்பவம் குறித்து ராகுல் கூறுகையில், "நாங்கள் அனைவரும வீட்டிற்குள் இருந்தபோது, ​​தெருவில் இருந்த ஒருவர் எங்களை அழைத்தார். நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். என் குழந்தை மிகவும் மோசமான நிலையில் இருந்தார்.  எங்கள் இதயம் கனத்தது. குழந்தை ரத்த வெள்ளத்தில் இருந்தது. குழந்தையின் வலது காது நாய்களால் சிதைக்கப்பட்டது.

எங்கள் பகுதியில் இது முதல் தாக்குதல் அல்ல. சில மாதங்களுக்கு முன்பு  எங்கள் குடும்பத்தில் மற்றொரு குழந்தை நாய் கடித்து உயிரிழந்தது. இதனால், பலமுறை புகார் அளித்தோம். ஆனால், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். அனைத்து பகுதிகளையும் கண்காணித்து வருகிறோம், இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளில் ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்ய வேண்டும் சம்பந்தப்பட்ட துறைக்கு முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்" என்றார்.

மேலும் படிக்க

Gyanvapi Mosque : ஞானவாபி மசூதி பாதாள அறையில் இந்துக்கள் வழிபட தடையில்லை.. உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?

Source link