Dharani Vendhan Profile: ஆரணி தொகுதி திமுக வேட்பாளராக தரணி வேந்தன் அறிவிப்புக்கு காரணம் என்ன?

மீண்டும் திமுக போட்டியிட காரணம் என்ன?

ஆரணி நாடாளுமன்ற தொகுதி சீரமைப்புக்கு பிறகு கடந்த 2009-ல் நடைபெற்ற தேர்தலில் திமுகவின்  கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிட்டது. அதில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான எம்.கிருஷ்ணசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு  கூட்டணியில் மாற்றம் ஏற்பட்டதால், 2014-ல் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிட்டு அதிமுகவிடம் தோல்வியை சந்தித்தது. தேர்தலில் தனியாக களம் கண்ட காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எம்.கிருஷ்ணசாமியின் மகனான எம்.கே.விஷ்ணு பிரசாத் குறைந்த வாக்குகள் பெற்று  தோல்வி அடைந்தார். திமுக கூட்டணிக்கு மீண்டும் திரும்பிய காங்கிரஸ் கட்சிக்கு 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், ஆரணி தொகுதியை திமுக ஒதுக்கியது. காங்கிரஸ் சார்பில் மீண்டும் போட்டியிட்ட எம்.கே.விஷ்ணுபிரசாத் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆரணி நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.கே.விஷ்ணு பிரசாத் அங்கு இருந்த திமுக பிரமுகர்களை சரியான முறையில் அணுகுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதன் அடிப்படையிலும் ஆரணி தொகுதியில்  ஒருமுறை கூட வெற்றியை பார்க்காத திமுகவினர் வரக்கூடிய தேர்தலில் திமுக களம் இறங்க வேண்டும் என தொண்டர்கள் குரல் எழுப்பி வந்தனர்.

அமைச்சர் எ.வ.வேலு சாய்ஸ்

ஆரணி நாடாளுமன்ற தொகுதியிலும், வரக்கூடிய தேர்தலில் வெற்றி பெறுவோம் என தொண்டர்கள் தொடர்ச்சியாக முழக்கமிட்டு வந்தனர். திமுகவினர் விருப்பம் மற்றும் கருத்தை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தெரிவித்துள்ளனர். அவரும், தொண்டர்களின் உணர்வுகளை தலைமைக்கு கொண்டு சென்றுள்ளார். இதுகுறித்து முதல்வரிடமும் ஆரணி தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.  அதன் பிறகு ஆரணி தொகுதியை மீண்டும் காங்கரஸ் கட்சி தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தெரிவித்தது. அதற்கு திமுக ஆரணி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணு பிரசாத் மீது மிகப்பெரிய அதிருப்தி உள்ளது என திமுக தெரிவித்தது. அந்த தொகுதியில் திமுக போட்டியிட்டால் அங்கு வெற்றி பெற்றும் என தெரிவித்துள்ளது. இதனால் எப்போதும் கொடுக்கப்படும் காங்கிரஸ் தொகுதி மாற்றி அமைக்கப்பட்டது. இந்த நிலையில், முதற்கட்ட திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். அதில் ஆரணி தொகுதிக்கு தரணி வேந்தனை அறிவித்துள்ளார்.

வடக்கு மண்டல செயலாளர் தரணி வேந்தன்

திமுக சார்பில் ஆரணி தொகுதியில் தரணி வேந்தன் போட்டியிடவுள்ளார். தரணி வேந்தன் திமுக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஏரமல்லூர் கிராமத்தை சேர்ந்த சாமிநாதநின் மகன் ஆவார். இவர் திமுகவில் 1986-ல் அவரும் அவருடைய மனைவியும் உள்ளாட்சி தலைவராகவும், ஒன்றிய குழு தலைவராகவும் தற்போது கவுன்சிலராகவும் இருந்து வருகின்றனர். 2 முறை கூட்டுறவு சங்க தலைவர், 6 முறை ஒன்றிய செயலாளர், 7 வருடம் மாவட்ட துணை செயலாளர், மாவட்ட பொருளாளர், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர், தற்போது வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். தரணி வேந்தன் வடக்கு மாவட்ட செயலாளராக அறிவித்ததில் இருந்து அமைச்சர் எ.வ.வேலுவுக்கு மிகவும் செல்ல பிள்ளையாகவும் உள்ளார். வடக்கு மாவட்டத்தில் எது செய்வதாக இருந்தாலும் அமைச்சரை கேட்டபிறகுதான் செய்வார். அதனால் அமைச்சருக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டார். இதனால் ஆரணி தொகுதியை மீண்டும் திமுகவின் கோட்டையாக நிரூபிக்க வேண்டும் என்பதால் ஆரணி தொகுதியில் திமுக மீண்டும் களம் காணவுள்ளது. தற்போது திமுகவும், அதிமுகவும் 2வது முறையாக நேருக்கு நேர் போட்டியிடுகிற்து. இதில் திமுக வெற்றி பெறுவதற்கு பெரும் முயற்சி எடுக்க போகிறது.

Source link