Dhanush Raayan Movie Casting Actres Dushara Play Lead Role with Prakash raj Selvaraghavan SJ Suryah


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தன்னுடைய 50வது படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே ப.பாண்டி படத்தை தனுஷ் இயக்கியிருந்ததால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் படத்தில் நடித்துள்ளவர்கள் யார் யார் என்ற விபரத்தை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தினமும் ஒருவரை அறிமுகம் செய்து வருகின்றது. இதில் ஏற்கனவே எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர் என படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் படத்தில் நடிகை துஷாரா நடித்துள்ளார் என இன்றைய அறிவிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர் இதற்கு முன்னர் இயக்குநர் ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கின்றது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 
கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக  தனுஷ் தெரிவித்த நிலையில் ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாகும் என கூறப்படுகிறது. ராயன் படத்துக்காக தனுஷ் மொட்டையடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் வன்முறைக்கு படத்தில் பஞ்சம் இருக்காது என்பதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உறுதி செய்துள்ளது. 
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் ராயன் படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா எடிட்டிங் பணியை மேற்கொள்ளும் நிலையில் ராயன் படம் இந்தாண்டே திரைக்கும் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்குப் பின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகின்றார். அதன் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Introducing @officialdushara from the world of #Raayan 💥@dhanushkraja @arrahman @iam_SJSuryah @selvaraghavan @prakashraaj @kalidas700 @sundeepkishan @omdop @editor_prasanna @PeterHeinOffl @jacki_art @kavya_sriram @kabilanchelliah @theSreyas @RIAZtheboss pic.twitter.com/620nYOWpAY
— Sun Pictures (@sunpictures) February 24, 2024

வடசென்னையைச் சேர்ந்த மூன்று சகோதரர்களின் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.  தனுஷூடன் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்து நடித்த சந்தீப் கிஷன் மற்றும் நடிகர் காளிதாஸ் இப்படத்தில் தனுஷின் சகோதரர்களாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக தனுஷ் படம் என்றால் அதற்கு அனிருத் இசையமைப்பது வழக்கம். ஆனால் தனுஷ் இயக்கும் இரண்டு படங்களுக்கு அனிருத் இசையமைக்காதது தனுஷின் முடிவாக இருக்கலாம். தனுஷ் முன்னதாக நடித்த மரியான் மற்றும் இந்தியில் வெளியான ராஞ்சனா உள்ளிட்ட படங்களுக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த இரண்டு படங்களில்  அனைத்துப் பாடல்களும் ஹிட் அடித்தன. தற்போது இப்படத்திற்கு ரஹ்மானின் இசை கூடுதல் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
அதே நேரத்தில் வளர்ந்து வரும் நடிகர்களான காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷன் இப்படத்தில் நடித்துள்ளதும் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

மேலும் காண

Source link