Delhi Girl Cremated 4,000 Dead Bodies In Hospital

மருத்துவமனையில் கேட்பாரற்ற 4,000 உடல்களுக்கு இறுதிச் சடங்கு செய்த டெல்லி பெண்ணை பலரும் தற்போது பாராட்டி வருகின்றனர். 
ஒருவரை இழந்த துக்கம் ஒவ்வொரு மனிதனையும் கவலையில் ஆழ்த்தினாலும், டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது சகோதரனை இழந்த சோகத்தை மறக்க கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுச்சேவையில் ஈடுபட்டுள்ளார். தற்போது இந்த பெண் குறித்தான செய்திதான் இந்தியா முழுவதும் ஹாட் டாபிக். 
அண்ணனை இழந்த சோகத்தில் மூழ்கிய அந்தப் பெண் தன் வாழ்க்கையின் இலக்கையே முற்றிலும் மாற்றிவிட்டார். இப்போது அவர் தனது சகோதரனை இழந்த சோகத்தை தனது வாழ்க்கையின் பணியாக ஏற்றுக்கொண்டு, உரிமை கோரப்படாத இறந்த உடல்களின் இறுதிச் சடங்குகளை தனது வாழ்க்கையின் பணியாக ஏற்றுக்கொண்டார். 
இறுதி சடங்கு செய்யும் பெண்:
டெல்லியில் 26 வயது பெண் ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக உரிமை கோரப்படாத சடலங்களை எரித்து வருகிறார். டெல்லி ஷாத்ரா பகுதியை சேர்ந்தவர் 26 வயதான பூஜா சர்மா . இவர் மருத்துவமனைகளில் நீண்ட காலமாக கேட்பாரற்று இருக்கும் உடல்களை பெற்று அவற்றுக்கு கண்ணியமான முறையில் இறுதிச் சடங்குகள் செய்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் சுமார் 4,000 சடலங்களை எரித்துள்ளேன் என தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து டெல்லியை சேர்ந்த பூஜா சர்மா கூறும்போது, “கடந்த இரண்டு ஆண்டுகளில், குடும்பம் அல்லது தொடர்புகள் எதுவும் இல்லாத சுமார் 4,000 உடல்களின் இறுதிச் சடங்குகளை நான் செய்துள்ளேன். மார்ச் 13, 2022 அன்று நான் என் சகோதரனை ஒரு சோகமான கொலையால் இழந்தேன். அப்போதிலிருந்து, நான் எனது தனிப்பட்ட துயரத்தை மறக்கும் வகையிலும், மற்றவர்களுக்கு ஆறுதலளிக்கும் வகையிலும் எனது வாழ்க்கையை ஆதாரமாக மாற்றிக் கொண்டேன். ஒரு சிறிய சண்டையில் 30 வயதான எனது அண்ணன் எனது கண் முன்னால் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த செய்தியைக் கேட்டதும், என் தந்தை, கோமா நிலைக்கு சென்றார்.
எனது அண்ணனுக்கு இறுதி சடங்குகள் செய்த அடுத்த 2 நாட்களில் பிறருக்கு உதவ வேண்டும் என்ற உறுதிப்பாட்டை முழுமையாக எடுத்து கொண்டேன். எனது குடும்ப பொறுப்புகளை கவனிப்பதுடன் ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். மேலும் காவல்துறை மற்றும் அரசு மருத்துவமனை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு ஆதரவற்றவர்களின் உடல்களை வாங்கி கண்ணியமான முறையில் இறுதிச் சடங்கு செய்து வருகிறேன். இப்போது அவர்களாகவே என்னை தொடர்பு கொண்டு நல்லடக்கம் செய்ய சொல்கிறார்கள்” என்றார்
தொடர்ந்து பேசிய அவர்“நான் எனது தந்தை மற்றும் பாட்டியுடன் வசிக்கிறேன். எனது தந்தை டெல்லி மெட்ரோவில் ஒப்பந்த ஓட்டுநராக பணியாற்றுகிறார். இறுதிச் சடங்குக்கு ஓர் உடலுக்கு ரூ.1,000 முதல் 1,200 வரை செலவாகிறது. எனது பாட்டிக்கு வரும் பென்ஷன் தொகையில் இருந்து இந்த செலவை சமாளிக்கிறேன். “பலர் நான் செய்யும் இந்த வேலையை ஒரு தடையாக பார்க்கிறார்கள். என் நண்பர்கள் என்னை சந்திப்பதை அவர்களின் குடும்பத்தினர் தடுக்கின்றனர்” என்கிறார் பூஜா.
மேலும், இந்தப் பணியால் பல சவால்களையும் பூஜா எதிர்கொண்டு வருவதாகவும், இதனால் தனது திருமண வாய்ப்பு தள்ளிப் போவதாகவும் தெரிவித்தார்.  பூஜா, சமூகப் பணியில் இளங்கலை பட்டம் மற்றும் முதுகலை பட்டம் படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Source link