CSK vs RCB Highlights: வெற்றியுடன் தொடங்கிய சி.எஸ்.கே; தோனிக்குப் பிறகு ருதுராஜ் அடைந்த பெருமை; விராட் படைத்த சாதனை; முழு விபரம்!

2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யமானவற்றை இங்கு காணலாம்.

இந்த போட்டியில் பெங்களூரு அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இதுதான் முதல் போட்டி.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டினை இழந்து 173 ரன்கள் சேர்த்தது.

பெங்களூரு அணி சார்பில் அனுஜ் ராவத் 48 ரன்களும், தினேஷ் கார்த்திக் 38 ரன்களும், டூ பிளெசிஸ் 35 ரன்களும் சேர்த்தனர்.

விராட் கோலி 21 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் தனது டி20 கெரியரில் 12 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்தார். இந்த சாதனையை கிறிஸ் கெய்லுக்குப் பின்னர் படைக்கும் இரண்டாவது வீரர் ஆவார்.

விராட் கோலி ஐபிஎல்-லில் இரண்டு அணிகளுக்கு எதிராக ஆயிரம் ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவர் டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு எதிராக இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

சென்னை அணி சார்பில் முஸ்தபிகுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

பெங்களூரு அணியின் ரஜித் படிதார் மற்றும் மேக்ஸ் வெல் என இருவரும் டக் அவுட் ஆனார்கள்.

பெங்களூரு அணி 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தபோது தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராவத் கூட்டணி 91 ரன்கள் சேர்த்து பெங்களூரு அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தனர். இதனால்தான் பெங்களூரு அணி 173 ரன்கள் குவிக்க முடிந்தது.

174 ரன்களை நோக்கி களமிறங்கிய சென்னை அணியின் இன்னிங்ஸை கேப்டன் ருதுராஜ் மற்றும் ரச்சின் ரவிந்தரா ஆகியோர் தொடங்கினர்.

ரச்சின் ரவீந்திராவுக்கு ஐபிஎல் தொடரில் இதுதான் அறிமுகப் போட்டி. இந்த போட்டியில் 15 பந்தில் 37 ரன்கள் குவித்தார்.

சென்னை அணி சார்பில் களமிறன்கிய அனைவரும் சிறப்பாக விளையாடி சென்னை அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தனர்.

சென்னை அணி 18.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் சேர்த்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை மைதானத்தில் கடந்த 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெங்களூரு அணி சென்னை அணியை வீழ்த்தியது கிடையாது. இந்த மோசமான சாதனை தொடர்கின்றது.

கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியிலேயே ருதுராஜ் வெற்றியுடன் தொடங்கியுள்ளார்.

இந்த போட்டியில் சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டுன் விளையாடிய வீரர் என்ற விருது வழங்கப்பட்டது.

இந்த போட்டியில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றிய முஸ்தபிகுர் ரகுமானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

91 மீட்டர் தூரம் சிக்ஸர் விளாசிய அனுஜ் ராவத்துக்கு சிறந்த சிக்ஸர் விளாசிய வீரர் என்ற விருது கொடுக்கப்பட்டது.

8 பவுண்டரிகள் விளாசிய டூ பிளெசிஸ்க்கு அதிக பவுண்டரிகள் விளாசிய வீரர் என்ற விருது கொடுக்கப்பட்டது.

இந்த வெற்றி மூலம் தோனிக்குப் பின்னர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றியைப் பதிவு செய்த இரண்டாவது கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார் ருதுராஜ்.

Source link