<p>7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக விருகம்பாக்கத்தை சேர்ந்த ஜெய் கணேஷ் என்பவரை போக்ஸோ வழக்கில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.</p>
<p>சென்னை விருகம்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர் ஜெய் கணேஷ் (வயது 30). இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவர் நெற்குன்றம் பகுதியில் வீட்டில் வர்ணம் புசும் வேலைக்கு சென்றுள்ளார். அதே பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் தான் 7 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். ஜெய் கணேஷ் பெயிண்டிங் வேலைக்கு சென்ற போது அப்பகுதியில் 7 வயது சிறுமி விளையாட்டிக் கொண்டிருந்தாள். இதனை கண்ட அந்த நபர் சிறுமியிடம் தவறாக நடந்துக்கொள்ள முயற்சித்துள்ளார். அந்த சிறுமியில் ஆடையை களைந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.</p>
<p>உடனடியாக அந்த சிறுமி அங்கிருந்து வீடு திரும்பியுள்ளார். சிறுமியின் ஆடை களைந்துள்ளதை கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின் விசாரித்த போது நடந்த சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது. உடனடியாக கோயம்பேட்டில் இருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் ஜெயகணேஷ் என்ற நபரை போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>அதேபோல், அம்பத்தூர் அடுத்த சோழபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புத்தூர் பகுதியைச் சேர்ந்த பெயிண்டரான முருகன் (26) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். போக்ஸோ வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p>