Crime: காப்பகத்தில் 21 குழந்தைகளுக்கு சித்ரவதை! நிர்வாணமாக்கி போட்டோ எடுத்த கொடூரம் – ம.பி.யில் ஷாக்!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வாத்சல்யாபுரம் ஜெயின் அறக்கட்டளை என்ற அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில் பெங்களூரு, சூரத், ஜோத்பூர், கொல்கத்தா ஆகிய இடங்களிலும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது.

21 குழந்தைகளுக்கு சித்ரவதை:

இந்த நிலையில், இந்தூரில் செயல்பட்டு வந்த ஆதரவற்ற இல்லத்தில் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. கடந்த வாரம் குழந்தை நலக்குழு அதிகாரிகள் ஆய்வு செய்ததை அடுத்து, இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காவல்துறையினரின் கூற்றுப்படி, நான்கு முதல் 14 வயதுக்குள் இருக்கும் 21 குழந்தைகளை காப்பகத்தில் இருந்த ஊழியர்கள் சித்ரவதை செய்துள்ளனர்.  குழந்தைகளை தலைகீழாக தொங்கவிடப்பட்டு, சுடான இரும்பியால் தாக்கி உள்ளனர். மேலும், குழந்தைகளை நிர்வாணமாக்கப்பட்டு புகைப்படம் எடுத்ததாகவும், மிளகாய்யை எரித்து அதில் வரும் புகையை இழுக்கச்  சொல்லியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீல் வைக்கப்பட்ட காப்பகம்:

சிறிய தவறுகள் செய்ததால் இதுபோன்று குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக புகாரில் உள்ளது. மேலும், நான்கு வயது குழந்தையை கழிவறையில் பூட்டி  வைக்கப்பட்டு, மூன்று நாட்களுக்கு உணவு வழங்கப்படாமல் இருந்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக குழந்தைகள் நலக் குழு அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து இந்தூர் கூடுதல் காவல் ஆணையர் அம்ரேந்திர சிங் கூறுகையில், ”குழந்தைகள் நலக் குழு அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குழு தனது புகாருடன் குழந்தைகளின் காயங்களின் படங்களையும் சமர்ப்பித்துள்ளது. காப்பகத்திற்கு உடனடியாக சீல் வைக்கப்பட்டு, குழந்தைகள் வேறு இடத்திற்கு பத்திரமாக மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சட்டவிரோதமாக இந்த காப்பகம் செயல்பட்டு வந்திருக்கிறது. தாக போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஒடிசா மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது” என்றார்.

முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் மத்திய பிரதேச போபால் பகுதியில் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட காப்பகத்தில் 26 குழந்தைகள் காணாமல் போனதாக புகார் எழுந்தது. பின்னர், 24 மணி நேரத்திற்குள் காணாமல் போன குழந்தைகளை போலீசார் மீட்டனர்.

இவர்கள் ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மத்திய பிரதேசத்திலுள்ள காப்பகத்தில் 21 குழந்தைகள் நிர்வாணமாக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு கடும் எதிர்ப்பு.. திமுகவை தொடர்ந்து காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு

Ram lalla Idol: அயோத்தி கோயிலில் ராமர் சிலையின் முகம் எப்படி இருக்கும்? வெளியான முதல் புகைப்படம்.. பரவசத்தில் பக்தர்கள்

Source link