Crime: இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம்.. பெண்ணை வெட்டிக்கொலை செய்து உடலை எரித்த சைக்கோ கொலையாளி..

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மலைப்பகுதியில் பழங்குடியினத்தைச் சேர்ந்த வாலிபர், ஆறு மாதம் ஒரு பெண்ணை அழைத்து வந்து குடும்பம் நடத்தியுள்ளார். அதன் பின் அந்த பெண்ணை வெட்டி கொலை செய்து மறைத்து விட்டு, நண்பரின் உதவியால் உடலை எரித்துள்ளார் . தகவல் அறிந்து வாழப்பாடி போலீசார் இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பட்டி அருகே தேக்கல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மலையாளப்பட்டி பகுதியில் கருமாவரத்தான் காடு என்று அழைக்க கூடிய 1.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலத்தை கடந்த ஆறுமாதத்திற்கு முன்பு நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியை சேர்ந்த வல்லரசு (28 ) என்பவர் வாங்கியுள்ளார். அவர், கும்பகோணம் மாவட்டம் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த மூன்று பெண் குழந்தைக்கு தாயான  சுகுணா என்ற பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் காதல் செய்து அங்கு அழைத்து வந்து, அந்த பெண்ணுடன் கடந்த ஆறுமாதமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகுணா (32)  பொங்கல் பண்டிகைக்கு தனது அம்மா வீடான மயிலாடுதுறைக்கு சென்று விட்டு 10 நாட்களுக்கு பின்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது சுகுணாவுக்கும் வல்லரசுக்கும் தகாராறு நடந்ததாகவும் ஆவேசமடைந்து கத்தியை எடுத்து கழுத்து தலை உள்ளிட்ட ஐந்து இடங்களில் வெட்டியதாகவும் அப்போது சுகுணா உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வல்லரசு இறந்த உடலை அங்கேயே விட்டு கொல்லிமலைக்கு சென்றுள்ளார்.

அங்கு வல்லரசுவின் நண்பரான பாக்கிய ராஜை (18) அழைத்து வந்து சடலமாக கிடந்த சுகுணாவின் உடலை தீயிட்டு எரித்துள்ளனர். அப்போது போலீஸ் வருவதை கண்டு இருவரும் தப்பியோட முயன்றுள்ளனர்.

எனவே வாழப்பாடி போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், எரிந்த சுகுணாவின் உடலை கைப்பற்றியுள்ளனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் வழக்கு பதிவு செய்து  வல்லரசு, உடந்தையாக இருந்த பாக்கிய ராஜ் (18) ஆகிய இருவரையும் தேடி   இரவில் வாழப்பாடி போலீஸார்  கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விசாரணையில் வல்லரசு போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, ஏற்கனவே தன் மீது போக்ஸோ வழக்கு, உறவினரை கொலை செய்த வழக்கு என இரண்டு வழக்குகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராம் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், 6 மாத காலம் குடும்பம் நடத்தியதாகவும் கூறியுள்ளார். பொங்கலுக்கு ஊருக்கு சென்று திரும்பிய சுகுணாவிடம் மாற்றங்கள் இருந்ததாகவும், இதனால் சுகுணா வல்லரசை விட்டு சென்றுவிடுவாரோ என்ற அச்சம் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். சண்டை முத்திப்போன நிலையில், வல்லரசு சுகுணாவை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Source link