ராஜா அண்ணாமலைபுரம் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அண்ணல் அம்பேத்கர் 134 வது பிறந்தநாளான “சமத்துவ நாளினை”யொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கும் – அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தி “சமத்துவ நாள் உறுதிமொழி” ஏற்றார்.
India is on the brink of the most critical election in its history!It is the solemn duty of every citizen to safeguard the beacon of democracy ignited by the revolutionary Dr. B.R. Ambedkar.The BJP is perilously intent on dismantling the Constitution. With a voracious… pic.twitter.com/IkSfeO9K8h
— M.K.Stalin (@mkstalin) April 14, 2024
சமத்துவ நாள்:
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான “சமத்துவ நாளினை”யொட்டி தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதோடு, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, “சமத்துவ நாள்” உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வபெருந்தகை, எம்.எல்.ஏ., மற்றும் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், முனைவர் தமிழச்சிதங்பாண்டியன், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, சென்னை தென்கிழக்கு மாவட்டச் செயலாளர் த.வேலு, எம்.எல்.ஏ., சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம், எம்.எல்.ஏ., கழக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, துணை அமைப்புச் செயலாளர் எஸ்.ஆஸ்டின், கழக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி, மருத்துவர் எழிலன் நாகநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா. செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பதிவு:
அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்ச உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “ஏழை – எளிய – ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காகவே தமது பேரறிவைப் பயன்படுத்திய அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் இன்று. அவர் உருவாக்கிக் கொடுத்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தான் பாசிசத்தை எதிர்த்து போரிட நம் கையில் இன்றைக்கும் இருக்கும் போர்க்கருவி.
ஏழை – எளிய – ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காகவே தமது பேரறிவைப் பயன்படுத்திய அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் இன்று.அவர் உருவாக்கிக் கொடுத்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தான் பாசிசத்தை எதிர்த்து போரிட நம் கையில் இன்றைக்கும் இருக்கும் போர்க்கருவி.அந்த அரசியல்…
— Udhay (@Udhaystalin) April 14, 2024
அந்த அரசியல் சட்டத்தை உருக்குலைக்க நினைக்கும் மக்கள் விரோத சக்திகளை மொத்தமாக விரட்டும் மாபெரும் ஜனநாயகக் கடமை நமக்கு இருக்கிறது. அண்ணலின் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்த நமது முதலமைச்சர் அவர்களின் தலைமையில் 40 தொகுதிகளிலும் வெல்வோம், அரசியல் சட்டத்தைக் காப்போம் என்று இந்நாளில் உறுதி ஏற்போம். வாழ்க அண்ணல் அம்பேத்கர்.” என பதிவிட்டிருந்தார்.
மேலும் காண