Monkey Man Trailer: ஹாலிவுட் பக்கம் திரும்பிய பொன்னியின் செல்வன் நடிகை: கலக்கும் மங்கி மேன் ட்ரெய்லர்!
“பொன்னியின் செல்வன்” படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஷோபிதா துலிபாலா. கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த ராமன் ராகவ் 2.0 என்ற படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமான இவர், அடுத்தடுத்து இந்தியில் சில படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயரத் தொடங்கினார். தமிழில் முதல் படமாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த ஷோபிதா, பிரபலமாகத் தொடங்கினார். இந்தி, தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கில் ஒரு படத்திலும், மூதோன் என்ற மலையாள படத்திலும் நடித்து தென்னிந்திய திரைத்துறைகளிலும் நடிக்க தொடங்கினார். மேலும் படிக்க
Pa Ranjith: “நீலம் ப்ரொடக்ஷன்ஸ் படம் என்றாலே சென்சார் போர்டு நெருக்கடி தருகிறார்கள்” – பா.ரஞ்சித் ஆதங்கம்!
ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு நடித்த ப்ளூ ஸ்டார் படம் கடந்த 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்த நிலையில் படத்தின் வெற்றி விழாவை படக்குழு கொண்டாடியது. அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற வெற்றி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற படத்தின் தயாரிப்பாளரான பா. ரஞ்சித் சென்சார் போர்டு குறித்து பேசியுள்ளார். மேலும் படிக்க
TEST Movie: ஷூட்டிங்கை முடித்த நயன், மாதவன், சித்தார்த்: சம்மருக்கு வெளிவரும் டெஸ்ட் திரைப்படம்!
தமிழ் சினிமாவில் மிகவும் குறைவான திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் ஹிட் கொடுத்த கதைக்களம் என்றால் அது கிரிக்கெட். கிரிக்கெட்டை மையக்கதையாக வைத்து வெளியான படங்கள் அனைத்தும் இங்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று அசத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் ஒரு அரசியல் கருத்தினை பேசும் படமாக இருந்தாலும், படத்தின் முக்கிய அங்கமாக இருப்பது கிரிக்கெட். இப்படியான நிலையில் கிரிக்கெட்டினை மையமாகக் கொண்ட அடுத்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
Heart Beat Series: இது ஹார்ட் பீட் பாட்டு! டாக்டர்களைப் பற்றிய “ஹார்ட் பீட்” சீரிஸின் பாடல் வெளியீடு!
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அடுத்ததாக வெளியிடவுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “ஹார்ட் பீட்” சீரிஸிலிருந்து “ஹார்ட் பீட் பாட்டு” எனும் பெப்பியான பாடலை வெளியிட்டுள்ளது. சூப்பர் சுப்பு எழுத்தில், மேட்லி ப்ளூஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடல், ‘ஹார்ட் பீட்’ சீரிஸின் சாரத்தையும், அதன் ஆன்மாவையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும் படிக்க
Music Composer Bharani: இப்படி காப்பி அடிக்கிறாங்க: அனிருத்துக்கு டஃப் கொடுக்க முடியும்: இசையமைப்பாளர் பரணி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு இரண்டாவதாக கூட்டணி சேர்ந்து நடித்த திரைப்படம் ‘லியோ’. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏராளமானோர் நடிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இப்படத்தின் இரண்டாம் பகுதி குறித்து சமீபத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பேசுபொருளாக மாறி இணையத்தில் வைரலானது. படத்தின் இரண்டாம் பாகம் மட்டும் சர்ச்சையை ஏற்படுத்தவில்லை, படத்தின் பாடல்கள் கூட திருடப்பட்டது தான் என பரபரப்புக் குற்றச்சாட்டை இசையமைப்பாளர் பரணி முன்வைத்துள்ளது பெரிய அளவில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க
மேலும் காண