இன்று ராஷ்மிகாவுக்கு பிறந்தநாள்.. 28 வயதில் அவரின் சொத்து மதிப்பு இவ்வளவா?
நேஷனல் க்ரஷ் எனக் கொண்டாடப்படும் நடிகை ராஷ்மிகா இன்று தன் 28ஆவது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடி வருகிறார். கன்னட சினிமாவில் தன் நடிப்பு பயணத்தைத் தொடங்கி, டோலிவுட், பாலிவுட் எனப் பயணித்து நாடு முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளார் ராஷ்மிகா. இந்நிலையில், 28 வயதான ராஷ்மிகா மந்தனாவுக்கு ரூ.45 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை மீரா ஜாஸ்மின் தந்தை திடீர் உயிரிழப்பு.. சோகத்தில் திரையுலகினர், ரசிகர்கள்
2001ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு என நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் நடிகை மீரா ஜாஸ்மின். தமிழில் இயக்குநர் லிங்குசாமியின் ரன் படத்தில் அறிமுகமாகி, பாலா, புதிய கீதை, சண்டக்கோழி என பல திரைப்படங்களில் நடித்து 2000களின் மத்தியில் டாப் நடிகையாக வலம் வந்தார். நேற்று இவரது தந்தை ஜோசப் பிலிப் உடல்நலக் குறைவால் காலமானார்.
அப்பாவை விட வயதில் மூத்தவரு செய்ற விஷயமா இது.. பிரபல நடிகைக்கு நேர்ந்த கதி
பிக்பாஸ் போட்டியாளரான ஆயிஷா கான் தன்னுடைய இளம் வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 17ஆவது சீசனில் போட்டியாளர்களராகக் கலந்துகொண்டு கவனமீர்த்தவர் நடிகை ஆயிஷா கான். இவர் திரைத்துறையில் தான் எதிர்கொண்ட விரும்பத்தகாத நிகழ்வுகள் குறித்து மனம் திறந்துள்ளார்.
மான் கராத்தே இயக்குநருடன் கைகோர்த்த அருண் விஜய்.. பிரமாண்டமாக உருவாகும் படம்!
மான் கராத்தே படத்தை இயக்கிய கிரிஷ் திருக்குமரனுடன் அருண் விஜய் இணைந்துள்ள திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார். சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன் ஆகிய நடிகைகள் நடிக்க, இப்படம் பிரம்மாண்ட அதிரடி சண்டைக் காட்சிகளுடன், பரபரப்பான ஆக்சன் திரில்லர் படமாக உருவாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் தி கேரளா ஸ்டோரி படம்.. கேரள முதல்வர் கடும் கண்டனம்
சென்ற ஆண்டு இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியாகி இந்தியில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. நடிகைகள் அதா ஷர்மா, சித்தி இத்னானி, தேவதர்ஷினி, பிரணவ் மிஷ்ரா, சோனியா பாலனி உள்ளிட்ட பலர் நடித்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக விளம்பரப்படுத்தப்பட்டது. தொடர்ந்து வெளியான இப்படத்தில் கேரளாவில் நடைபெறும் லவ் ஜிஹாத், இந்து, கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பெண்கள் இஸ்லாமுக்கு மதமாற்றம் செய்யப்பட்டு அரபு நாடுகளுக்கு அனுப்பப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில், கடும் விமர்சனங்களை இப்படம் பெற்றது.
மேலும் காண