Church Festival: தூத்துக்குடி அருகே நடைபெற்ற அசன விருந்து.. மண்வெட்டி கொண்டு பரிமாறப்பட்ட உணவு!


<p>தூத்துக்குடி அருகே நடைபெற்ற அசன விருந்தில் மண்வெட்டி கொண்டு சாப்பாடு பரிமாறப்பட்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சிறப்பூர் பரிசுத்த பவுலின் ஆலயத்தில் 167வது ஆலய பிரதிஷ்டை பண்டிகை நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வை முன்னிட்டு பிரம்மாண்டமான முறையில் சமையல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி 4 டன் அரிசி , 2 டன் பருப்பு, 6 டன் காய்கறி, 500 கிலோ பட்டாணி கொண்டு பிரம்மாண்டமான முறையில் மிகப்பெரிய அண்டாவில் உணவு தயார் செய்யப்பட்டிருந்தது. இந்த உணவானது&nbsp; அசனப் பண்டிகைக்கு வந்திருந்த அனைவருக்கும் பந்தியில் பரிமாறப்பட்டது.</p>
<p>மேலும் இங்கு சமைக்கப்பட்டிருந்த அரிசி சாப்பாட்டினை மண்வெட்டியை கொண்டு அங்கிருந்த ஆலய நிர்வாகிகள் அள்ளி அள்ளி அதனை பந்திக்கு கொண்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதோடு மட்டுமல்லாது அவர்களின் வீடுகளுக்கும் தாங்கள் கொண்டு வந்திருந்த பாத்திரத்தில் உணவை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வாங்கி சென்றனர். இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.</p>

Source link