அமெரிக்காவை பின்னுக்கு தள்ளும் சீனா – புதிய ராக்கெட்டை ஏவியது…

அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளும் வகையில், சீனா புதிய ராக்கெட்டை ஏவியுள்ளது.

உலகிலேயே முதல் நாடாக சொந்தமாக விண்வெளி ஆய்வு மையம் வைத்துள்ள சீனா, அடுத்த‍டுத்து ராக்கெட்டுகளை ஏவி, விண்வெளியில் தனி ராஜ்ஜியம் நடத்தி வருகிறது.

அதிலும், எந்தவகையான செயற்கைக்கோள்களை ஏவுகிறது என்று மற்ற நாடுகளுக்கு தெரியாத வகையில், ரகசியமாக செயல்படுவதால், சீனாவை யாரும் தொட முடியாத இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை புதிதாக ஒரு ராக்கெட்டை, சாங்ஷி மாகாணத்தில் உள்ள தையூவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து ஏவியுள்ளது. அதிகாலை 12.34 மணிக்கு, 3 தொகுதிகளைக் கொண்ட யோகன் -40 என்ற செயற்கைக்கோள்களை, மார்ச்-6 சென்ற ராக்கெட் மூலமாக விண்ணுக்கு செலுத்தியது.

இந்த செயற்கைக்கோள்கள், ரிமோட் சென்சிங் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியவை ஆகும்.

https://x.com/globaltimesnews/status/1964493442475839935

அனுப்ப‍ப்பட்ட செயற்கைக்கோள்கள் அனைத்தும், வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.