Chief Minister Stalin laid the foundation stone of the 97.67 crore underground sewerage project in Tiruvannamalai


தமிழ்நாடு முதலமைச்சர் இன்று செங்கல்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலை நெமிலியிலி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருவண்ணாமலை நகராட்சியில் ரூபாய் 97.67 கோடி மதிப்பில் விடுப்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தினை காணொளிக் காட்சியின் வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து  வைத்தார். திருவண்ணாமலை நகராட்சி அண்ணா நகர் 5-வது தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு பணியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் உடனிருந்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அம்ரூத் 2.0 திட்டம் 2022-23 என்ற திட்டத்தின் மூலம் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தும் பணி” திருவண்ணாமலை நகராட்சியில் விடுப்பட்ட 17 வார்டு பகுதிகளான போளுர் ரோடு, அவலூர்பேட்டை சாலை, பல்லவன் நகர்,மத்திய பேருந்து நிலைய பகுதிகள், புதுத் தெரு, சகாயம் நகர், பெரும்பாக்கம் சாலை,செங்கம் சாலை, தேனிமலை,
 

தாமரை நகர், அண்ணா நகர், மாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் ரூபாய் 97.67 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தும் பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. மேற்படி பணிக்கு மதிப்பீட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளவை பின்வருமாறு தொழில்நுட்பம் – எஸ்.பி.ஆர் விடுபட்ட வார்டுகளின் எண்ணிக்கை 17 வார்டுகள் பாதாள சாக்கடை வீட்டிணைப்புகள் ஒன்பதாயிரத்து நூற்று தொன்னூற்று இரண்டு எண்ணிக்கை, சாலையோர கழிவு நீரேற்று நிலையம் (எல்எஸ்) 18 எண்ணிக்கை, கழிவு நீரேற்று நிலையம் (பிஎஸ்) 4 எண்ணிக்கை சுத்திகரிப்பு நிலையம் (எஸ்டிபி) 1 (13.16 எம்எல்டி), கழிவு நீர் பைப்லைன் (எஸ்எல்) 107.39 கி.மீ பிரதான கழிவு நீர் பைப்லைன் (பிஎம்) 15.230 கி.மீ மதிப்பீட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து செய்யாறு நகராட்சி, ஆரணி நகராட்சி, வந்தவாசி நகராட்சியில் என ஒவ்வொரு நகராட்சிகளிலும் ரூபாய் 5 கோடியில் மொத்தம் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணியினையும் தொடாங்கி வைத்தார்.

 
மேலும் போளுர் வட்டம், களம்பூர் பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் மத்திய அரசின் பங்கு தொகை ரூபாய் 8.99 கோடி, மாநில அரசின் பங்கு தொகை ரூபாய் 5.39 கோடி, பேரூராட்சி பங்கு தொகை ரூபாய் 3.60 கோடி என மொத்தம் ரூபாய் 17.98 கோடி மதிப்பீட்டில் குடிநீர் விநியோக அபிவிருத்தி திட்டப்பணிகளை காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இன்று மட்டும் மொத்தம் ரூபாய் 130 கோடியே 65 இலட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய பணிகளை தொடக்கி வைத்தார். இந்நிகழ்வில் நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்திக் வேல்மாறன், நகரமன்ற துணைத் தலைவர் ராஜாங்கம் திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் மு.ரா.வசந்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் காண

Source link