ஐபிஎல் சீசன்:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தனி நபர் அதிகபட்ச ரன்கள் குவித்த வீரர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:

கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில், முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்களை குவித்தது. அதன்படி அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஷேன் வாட்சன் 61 பந்துகளில் 101 ரன்களை குவித்தார். இதுவே சேப்பாக்கம் மைதானத்தில் எடுக்கப்பட்ட தனிநபர் அதிகபட்ச ரன்னாக உள்ளது. அதன்படி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தனிநபர் அதிகபட்ச ரன்கள் எடுத்த டாப் 5 வீரர்களின் பட்டியல் கீழே:

தனிநபர் அதிகபட்ச ரன்கள்:

வீரர்கள்

அதிகபட்சம்

எதிரணி

ஆண்டு

ஷேன் வாட்சன்

101

சி.எஸ்.கே

2013

சுரேஷ் ரெய்னா

100

கிங்ஸ் 11 பஞ்சாப்

2013

பிரண்டன் மெக்கல்லம்

100

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

2015

ஷேன் வாட்சன்

96

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

2019

மைக்கேல் ஹஸ்ஸி

95

கொல்கத்தா நைட்ரைடரஸ்

2013