லியோ தாஸ் -ஆக மாறிய தல தோனி:
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வரும் தொடர் ஐ.பி.எல். 16 சீசன்கள் வெற்றிகராமாக முடிந்துள்ள நிலையில் 17-வது சீசன் நடைபெற உள்ளது. அதன்படி, 17 வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
முதல் போட்டியே சென்னையில் நடைபெற உள்ளது ஐபிஎல் ரசிகர்கள் மட்டும் இன்றி தோனி ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது. அதற்கான காரணம் தோனி விளையாடும் கடைசி ஐ.பி.எல் தொடராக இந்த தொடர் தான் இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால், தோனி 40 வயதை கடந்தாலும் பிட்னஸ் உடன் இருப்பதால் அவர் கண்டிப்பாக இன்னும் ஒரு சில ஐ.பி.எல் தொடரில் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது. அதே நேரம் அடுத்த சீசனில் விளையாடுவது பற்றி தோனி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பயிற்சி மேற்கொள்வதற்காக நேற்று (மார்ச் 5) சென்னை வந்தார். அப்போது விமானநிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சி.எஸ்.கே வெளியிட்ட தரமான வீடியோ:
“A gift for the fans.” – THA7A FOREVER! 🦁💛#Dencoming #WhistlePodu pic.twitter.com/pg0Rmg54WR
— Chennai Super Kings (@ChennaiIPL) March 5, 2024
இந்நிலையில் தான் சி.எஸ்.கே அணி நிர்வாகம் தோனிக்காக வீடியோ ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதாவது நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ பட காட்சி போல தோனிக்கு காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சி.எஸ்.கே வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் லியோ பட காட்சிகள் போன்று தோனியின் புகைப்படத்தை செல்போனில் போட்டோ எடுத்து சிங்கம் போன்று உடை அணிந்திருப்பவரிடம் காட்டுகிறார். அவர், தோனியின் பழைய புகைப்படத்தை எடுத்து, கண்ணாடிய உடைத்து தோனிக்கு முடி வளர்ந்திருந்தால் எப்படி இருக்கும் என்பது போன்று ஓவியம் வரைந்து, வந்திருப்பவர் பழைய தோனி தானா? என்பதை பார்க்கும் வகையில் அந்த வீடியோ காட்சி அமைந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா – நடந்தது இதுதான்!
மேலும் காண