Judge Anand Venkatesh: இந்திய தண்டனை சட்டங்களின் பெயரை மாற்றினாலும், அவற்றை இந்தியிலேயே குறிப்பிடுவேன் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து:
இந்திய குற்றவியல் சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷும் தண்டனை சட்டங்களின் பெயர் மாற்றம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, “ஐபிசி, சிஆர்பிசி, ஐ.இ.ஏ ஆகிய குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் இந்தியில் மாற்றப்பட்டாலும் நான் ஐபிசி என்று தான் குறிப்பிடுவேன். ஏனென்றால் எனக்கு இந்தி தெரியாது. எனவே இந்தியில் உள்ள புதிய பெயர்களை சரியாக உச்சரிப்பது எனக்கு கடினமாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய ஊழல் வழக்குகளில், பல்வேறு அதிரடியான தீர்ப்புகளை வழங்கி ஆனந்த் வெங்கடேஷ் கவனம் ஈர்த்து வருகிறார். இந்த நிலையில், குற்றவியல் சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்றுவது குறித்து ஆனந்த் வெங்கடேஷ் பேசி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.