Chance Of Rain In Tamil Nadu For Next Two Months Meteorological Department – TNN | Rain Alert: தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
”கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
20.01.2024: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.  தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
21.01.2024: தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள்  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய  மாவட்டங்கள் மற்றும்  புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
22.01.2024 முதல்  26.01.2024 வரை: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)
வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) 3, ஊத்து (திருநெல்வேலி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), நாலுமுக்கு (திருநெல்வேலி), தலைஞாயிறு (நாகப்பட்டினம்) தலா 2, வட்டானம் (ராமநாதபுரம்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), கோடியக்கரை (மயிலாடுதுறை), காக்காச்சி (திருநெல்வேலி), சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி), மண்டபம் (ராமநாதபுரம்), திருவாடானை (ராமநாதபுரம்), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), மாஞ்சோலை (திருநெல்வேலி), மணமேல்குடி (புதுக்கோட்டை) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் படிக்க 
சாலை முழுவதும் கட்சிக் கொடிகள்..! விண்ணைப் பிளக்கும் ஜெய்ஸ்ரீராம் கோசம்.. மோடியை வரவேற்கத் தயாரான பாஜகவினர்..!
PM Modi visit Rameswaram: ராமேஸ்வரத்தில் சாமி தரிசனத்திற்கு தடை – 1200 வட மாநில பக்தர்கள் தவிப்பு

Source link