Champai Soren Kept On Hold By Governor MLAs To Be Flown Out Of Ranchi after Hemant Soren Court custody


ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சம்பாய் சோரன் இன்று அதாவது பிப்ரவரி 1ஆம் தேதி, அடுத்த ஆட்சி அமைக்க தன்னை அழைக்குமாறு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் வலியுறுத்தியுள்ளார்.  பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நேற்று மாலை அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதில் இருந்து முதலமைச்சர் இல்லாத நிலையில் மாநிலத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பேசியுள்ளார் சம்பாய் சோரன். 
உரிமை கோரிய சம்பாய் சோரன்:
ஆளும் ஜேஎம்எம்-காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த 5 எம்எல்ஏக்களுடன் ராஞ்சியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ராதாகிருஷ்ணனை சம்பாய் சோரன் சந்தித்து முதலமைச்சராக பொறுப்பேற்க அழைப்பு விடுக்குமாறு கோரியுள்ளார். ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் கூட்டணியில் இருக்கும் 43 எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். 
ஆளுநரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சம்பாய் சோரன், “நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் எனவும் 43 எம்எல்ஏக்களும் சர்க்யூட் ஹவுஸில் (மாநில அரசு விருந்தினர் மாளிகை) தங்கியுள்ளனர். எங்கள் கோரிக்கை மீது விரைவில் முடிவெடுப்பதாக ஆளுநர் உறுதியளித்தார்” என்றும் செய்தியாளர்களிடம் கூறினார். இருப்பினும் இதுவரை அதிகாரப்பூர்வமாக பதவியேற்பு விழா  நடைபெறும் தேதி மற்றும் நேரம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. 
ரிசார்ட் அரசியல்?
இதற்கிடையில், மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், சம்பாய் சோரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஒன்றிணைக்கப்பட்டு, மாநிலத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதுமட்டும் இல்லாமல் ஜார்கண்டில் ரிசார்ட் அரசியல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என ஜார்கண்ட் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பேச்சுகள் அடிபடுகின்றது. இந்த நிலையில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களை விமானம் மூலமாக ஹைதரபாத் அழைத்துச் சென்றுள்ளனர்.
முதலமைச்சராக இருந்த் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட ஒருநாள் முழுவதும் அரசாங்கம் இல்லை என்ற குழப்பமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஜே.எம்.எம்-ன் சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்பை சோரன் நேற்று மாலை தேர்வு செய்யப்பட்டார். ஹேமந்த் சோரன் பதவி விலகியதும், மத்திய ஏஜென்சியால் கைது செய்யப்பட்டதை முன்கூட்டியே கணித்திருந்ததால் இந்த அதிரடி அரசியல் மாற்றங்கள் ஜார்க்கண்டில் நடந்தேறியுள்ளது. 
முன்னதாக ராஞ்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஹேமந்த் சோரனை ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. அதேநேரத்தில், ஹேமந்த் சோரன் ஏற்கனவே தனது கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மனுவை விசாரிக்க ஒப்புக்கொண்டது.

Jharkhand CM Soren: பாய்கிறது கைது நடவடிக்கை? மனைவியை வைத்து புது திட்டம் தீட்டும் ஜார்கண்ட் முதலமைச்சர் சோரன்! சிக்கல் என்ன?
Hemant Soren: கைதாகிறாரா ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்? வீட்டிற்கே சென்று அமலாக்கத்துறை விசாரணை

மேலும் காண

Source link