தமிழகம் மற்றும் கேரள இளைஞர்களை ஏமாற்றி, ரஷ்ய ராணுவத்த்தில் பணியாற்ற கடத்திய கும்பலை சேர்ந்த 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
கன்னியாகுமரியை சேர்ந்த நிஜில் ஜோபி பென்சாம், மும்பையை சேர்ந்த அந்தோனி மைக்கேல், கேராளாவை சேர்ந்த அருண் மற்றும் யேசுதாஸ் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சமூக வலைதளம் மூலமாக விளம்பரம் செய்து ரஷ்யாவிற்கு ஆட்களை கடத்தியுள்ளனர். அவ்வாறு கடத்தப்பட்ட இந்தியர்கள் ரஷ்யா, உக்ரைன் போரில் பயன்படுத்தபடுகின்றனர்.
https://x.com/ANI/status/1787898302068826278
இதில், தமிழ்நாட்டை சேர்ந்த நிஜில், ரஷ்யாவில் மொழி பெயர்பாளராக பணியாற்றிக் கொண்டு, இந்த கும்பலின் முக்கிய நபராக செயல்பட்டு வந்துள்ளார். ரஷ்யா ராணுவத்தில் இந்தியர்களை சட்டவிரோதமாக சேர்ப்பதில் நிஜில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
மைக்கேல் ஆண்டனி, பைசல் பாபா ஆகியோர் சென்னையில் இருந்து ரஷ்யாவிற்கு செல்ல, விசா வாங்கித் தரும் பணியில் ஈடுபட்டு, தமிழர்கள் மற்றும் கேரள இளைஞர்களை கடத்தி வந்துள்ளனர்.
மார்ச் மாதம் இந்த வழக்கு தொடர்பாக, சென்னை உட்பட ஏழு நகரங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டு, முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.