CAA Rules: நாடு முழுவதும் அமலுக்கு வந்தது குடியுரிமைத் திருத்தச் சட்டம் – மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் இன்று முதல் அதாவது மார்ச் மாதம் 11ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Central Government notifies implementation of Citizenship Amendment Act (CAA). pic.twitter.com/zzuuLEfxmr

— ANI (@ANI) March 11, 2024

குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் பல அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை அப்போது நடைமுறைப்படுத்தவில்லை. இந்நிலையில் இன்று இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்த சட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் இருந்து, இந்தியாவில் குடியேறும் முஸ்லீம்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் வழிவகை செய்கின்றது.

மேலும் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை.

பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த சட்டத்திருத்தத்தினை அமல்படுத்துவதற்கான விதிகளை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

Source link