பொங்கல் பண்டிகை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உள்ளனர். வழக்கமாக பண்டிகை காலத்தில் பொதுமக்கள் சிரமமின்றி ஊருக்கு சென்று வர அவர்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த பொங்கல் பண்டிகைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ஜனவரி 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சொந்து ஊர்களுக்கு மக்கள் செல்வதற்காக ஜனவரி 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை 17,581 சிறப்பு பேருந்கள் இயக்கப்படுகிறது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 5 முன்பதிவு மையங்களும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும், கிளாம்பாக்கத்தில் 5 முன்பதிவு மையங்களும் செயல்படுகிறது. இதனை பயன்படுத்தி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்து கொள்ளலாம். இச்சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in மற்றும் tnstc official app ஆகிய இணையதளங்களில் வாயிலாக முன்பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிளாம்பாக்கத்தில் பொதுமக்கள் அவதி
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், போதிய அளவில் கடலூர், பண்ருட்டி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து கிடைக்காததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்து பேருந்தில் பயணம் செய்தனர்.
அலைந்து திரியும் பயணிகள்
அதேபோன்று தாம்பரம் சானடோரியம் பகுதியில் இருந்து விக்கிரவாண்டி வழியாக செல்லக்கூடிய, கும்பகோணம் ,தஞ்சாவூர், ஆகிய ஊருக்கு செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து நிலையத்திலும் பயணிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஓடும் பேருந்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் , எகிறி குதித்த இடம் பிடிக்கும் சம்பவம் நடைபெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.