கால்வாயில் கவிழ்ந்த பேருந்து… 13 பேர் படுகாயம்… பரபரப்பு…

இலங்கையில் கால்வாய்க்குள் பேருந்து ஒன்று கவிழ்ந்த‍தில் 13 பேர் படுகாயமடைந்தனர்.

இலங்கையின் வராகபோலாவில் 7 பெற்றோர், குழந்தைகளுடன் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரென சாலையோரம் இருந்த கால்வாயில் கவிழ்ந்த‍து.

இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 13 பேர் படுகாயமடைந்தனர். நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்துக்குள்ளான பேருந்து மீட்கப்பட்ட நிலையில், விபத்து எப்படி எற்பட்டது? எதனால் ஏற்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி ; கொழும்பு கெசட்