Bigg Boss Tittle Winner: ஏபிபி நடத்திய கருத்துக் கணிப்பு; இந்த முறை பிக்பாஸ் டைட்டிலை வெல்பவர் யார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் செவன் இன்னும் ஓரிரு நாட்களில் முடியப்போகின்றது. இதனால் இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார்தான் டைட்டில் வின்னர் என வீட்டில் இருப்பவர்களுக்கு வீட்டில் இருந்து எவிக்ட் ஆன போட்டியாளர்களுக்கு ரசிகர்களுக்கு என அனைவருக்குமே உள்ளது. இந்த கேள்விக்கான பதிலை தமிழில் உள்ள முன்னணி செய்தி நிறுவனங்களின் ஒன்றான ஏபிபி நாடு வலைதளம் சார்பில் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரசிகர்கள் அளித்துள்ள பதிலை இங்கே காணலாம்.

போட்டியாளர்களைப் பொறுத்தவரையில் அனைவருமே  பிக்பாஸ் வீட்டிற்குள் களமிறங்கிய முதல் நாளில் இருந்து முட்டி மோதி டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டது மட்டும் இல்லாமல் மக்கள் மனதிலும் இடம் பிடித்து டைட்டிலை நெருங்கி வருகின்றனர். இந்த நிலையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மணிச்சந்திரா பிக்பாஸ் சீசன் செவன் டைட்டிலை வெல்ல 59.8% வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் வாக்களித்துள்ளனர். வைல்டு கார்டில் எண்ட்ரி கொடுத்த அர்ச்சனா அடுத்த இடத்தில் உள்ளார். பிக்பாஸ் போட்டியாளர்களில் பி.ஆர். டீம் தனக்கென தனியாக கொண்டுள்ள போட்டியாளர் எனக்கூறப்படும் அர்ச்சனாவுக்கான வெற்றி வாய்ப்பு 44.9 சதவீதம் உள்ளது என ரசிகர்கள் வாக்களித்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 7 டைட்டிலை வெல்லப்போவது யார்? https://t.co/wupaoCzH82 | #BiggBossTamil #BiggBoss7Tamil #Maya #Vishnu #Archana #Mani #Dinesh

— ABP Nadu (@abpnadu) January 11, 2024

அதேபோல் டிக்கெட் டீ ஃபினாலேவில் வெற்றி பெற்று நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்ற விஷ்ணு இந்த சீசனின் டைட்டிலை வெல்ல 41.7 சதவீதம் வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் வாக்களித்துள்ளனர். இவருக்கு அடுத்த இடத்தில் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து சிறப்பாக விளையாடி ரசிகர்களின் மனதை வென்றது மட்டும் இல்லாமல் தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களின் மனம் வென்ற தினேஷ் உள்ளார். இவர் டைட்டிலை வெல்ல 40.2 சதவீதம்தான் வாய்ப்புள்ளது என ரசிகர்கள் கணித்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 7 டைட்டிலை வெல்லப்போவது யார்? https://t.co/wupaoCzH82 | #BiggBossTamil #BiggBoss7Tamil #Maya #Vishnu #Archana #Mani #Dinesh

— ABP Nadu (@abpnadu) January 11, 2024

கடைசி இடத்தில் உள்ள போட்டியாளர் யார் என்றால் அது மாயா. இந்த சீசனில் வீட்டிற்குள் நுழைந்தது முதல் இப்போது வரை கேம் ப்ளானுடன் இருக்கின்றார். இவர் இந்த சீசனின் டைட்டிலை வெல்ல உள்ள வாய்ப்பு என்பது 13.5 சதவீதம் என ரசிகர்கள் வாக்களித்துள்ளனர்.

ரசிகர்களின் இப்போதைய கணிப்பு அடுத்த நாளிலேகூட முற்றிலுமாக மாறலாம். ஆனால் டைட்டில் உரிய நபருக்குச் செல்லவேண்டும் என பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பரவலாக உள்ளது.

Source link