Bigg Boss 7 Tamil Mani: பிக்பாஸ் வீட்டுக்குள் மறுபடியும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள ரவீனா, மணியிடம் பேச முயற்சிப்பதும், அதற்கு ”தனக்கு நிறைய வேலை இருக்கு” என்று மணி கோபத்துடன் செல்வதும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மணி தன்னை ஒதுக்குவதை நிக்சனிடம் கூறி புலம்பும் ரவீனாவை நெட்டிசன்ஸ் விமர்சித்து வருகின்றனர்.
நாளையுடன் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நிறைவு பெறும் நிலையில் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. பிக்பாஸ் டைட்டில் வின்னர் ரேஸில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் வென்ற விஷ்ணு, தினேஷ், மாயா, அர்ச்சனா மற்றும் மணி உள்ளனர். இதற்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிக் கொண்டாட்டமாக முன்னதாக எவிக்ட்டாகி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ரவீனா, மணியிடம் பேச முயற்சிக்கிறார். ஆனால் ரவீனாவிடம் பேச மறுப்பு தெரிவிக்கும் மணியின் வீடியோ டிரெண்டாகி வருகிறது. மணியிடம் பேசும் ரவீனா, ”எதுக்கு என்னை அவாய்ட் பண்றீங்க.. எல்லாத்தையும் மறந்துடுங்க.. வெளியே சென்று பேச நிறைய இருக்கு” என்கிறார். அதற்கு பதிலளித்த மணி, “ எனக்கு செட் ஆகலனா செட் ஆகல தான். எனக்கு நிறைய இருக்கு ஏகப்பட்டது இருக்கு” என்று கூறிக் கொண்டே ரவீனாவிடம் இருந்து எழுந்து செல்கிறார்.
தன்னிடம் மணி அப்படி பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாத ரவீனா, நிக்சனிடம் புலம்பியுள்ளார். நிக்சனிடம் பேசிய ரவீனா, “ நீ என்னை புரிந்து கொண்ட அளவுக்கு அவன் என்னை புரிந்து கொள்ளவில்லை” என்றார். மேலும் மணி தன்னை ஓவராக பிடித்து வைத்ததை போல் ரவீனா பேசியுள்ளார். ரவீனாவின் இந்த பேச்சை கேட்ட நெட்டிசன்ஸ் “ பிக்பாஸில் உன்னை பற்றி பேசுவதற்கு மனிதான் காரணம். பேச்சை நேரத்துக்கு ஏற்றார் போல் மாற்றி பேச வேண்டாம்” என காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரவீனா மற்றும் மணியின் நட்பு குறித்து பரவலாக நெட்டிவ் கருத்துகள் எழுந்தன. பிக்பாஸ் போட்டியாளர்கள் கூட இருவரும் காதலிப்பதாக கூறி வந்தனர். பிக்பாஸ் டாஸ்க்குகள் ரவீனாவுக்காக மணி விளையாடுவதாகவும் குற்றாம் சாட்டினர். சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற பிரீஸ் டாஸ்க்கில் ரவீனாவின் விளையாட்டு மணியால் தான் கெடுவதாக ரவீனாவின் அம்மா குற்றம் சாட்டியிருந்தார். பிக்பாஸ் வீட்டிற்குள் ரவீனாவை சுயமாக முடிவெடுக்க விடாமல் மணி தடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.