Babar Azam: கேப்டனாக மீண்டும் யு-டர்ன்! பாகிஸ்தான் அணியில் பாபர் அசாமுக்கு மீண்டும் வாய்ப்பு? வெளியான பெரிய அப்டேட்!

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் பல பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது.

இந்தநிலையில், சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மொஹ்சின் நக்வி என்ற புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் பதவியேற்றவுடன் மற்றொரு பெரிய நிகழ்வு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதன்படி, பாகிஸ்தான் அணியின் கேப்டனாக மீண்டும் பாபர் அசாம் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

ஏன் இந்த முடிவு..?

பாகிஸ்தான் அணியின் அனுபவ பேட்ஸ்மேனும், முன்னாள் கேப்டனுமான பாபர் அசாமை மீண்டும் கேப்டனாக்க பரிசீலிக்கப்படுவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில், புதிய பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி, பாபர் அசாமை மீண்டும் அணியின் கேப்டனாக பார்க்க விரும்புகிறார். இப்படியான சூழ்நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

உலகக் கோப்பையில் மோசமான ஆட்டம்:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பாபர் அசாம் பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும், கேப்டனாக  ஐசிசி போட்டிகளில் அவர் சிறப்பாக எதையும் செயல்படவில்லை. உதாரணத்திற்கு பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 2023 உலகக் கோப்பையில் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தியது. மேலும், இதே உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்தது.

ஷான் மசூத், ஹாஹீனின் கேப்டன் பதவி என்ன ஆகும்..?

பாபர் அசாம் விலகியதற்கு பிறகு பாகிஸ்தான் அணி புதிய கேப்டன்களாக ஷான் மசூத் மற்றும் ஹாஹீன் அப்ரிடி  நியமிக்கப்பட்டனர். இருவரும் சமீபகாலமாக கேப்டனாக பயணத்தை தொடங்கியுள்ளனர். இப்படிப்பட்ட நிலையில், ஒரே ஒரு தொடருக்குப் பிறகு கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டால், பல கேள்விகள் வாரியத்தின் முன் எழும்.

மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தது. இதன் பிறகு, பாகிஸ்தான் அணி ஷாஹீன் அப்ரிடி தலைமையில் நியூசிலாந்து மண்ணில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது, அதில் அவர்கள் 4-1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

2019 உலகக் கோப்பைக்குப் பிறகு சர்பராஸ் கானுக்கு பதிலாக பாபர் அசாம் பாகிஸ்தானின் ஒருநாள் அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இதன் பிறகு, கடந்த 2021ம் ஆண்டு டெஸ்ட் கேப்டன் பதவியும் பாபர் அசாமுக்கு வழங்கப்பட்டது. 2022 டி20 உலகக் கோப்பை போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டி வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

Source link