தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் குடிபோதையில் ரோட்டில் விழுந்து கிடக்க, இதைப்பார்த்து இசக்கி பதறிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, ஷண்முகம் தன்னைப் பிடிக்க வருபவர்களை அடிக்க, இசக்கி “யாராவது கையை பிடிங்க வீட்டில் விட்டுடலாம்” என்று உதவிக்கு கூப்பிட, யாரும் வர மறுக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இசக்கியை பின்தொடர்ந்து வந்த முத்துப்பாண்டி, “வாடி வீட்டுக்குப் போகலாம்: என்று கூப்பிட அவள் வர மறுக்கிறாள்.
இதனால் முத்துப்பாண்டி பக்கத்தில் இருக்கும் கல்லைத் தூக்கி சண்முகத்தின் நெஞ்சில் கால் வைத்து, “வரலைனா உன் அண்ணன் மேலேயே போட்டு கொன்னுடுவேன்” என்று மிரட்ட, இசக்கி பயந்து கொண்டு முத்துபாண்டியுடன் சென்று விடுகிறாள். வீட்டிற்கு வந்ததும் இசக்கி ஷண்முகம் குடித்து விழுந்து கிடக்கும் விஷயத்தை சொல்ல, பாக்கியம் அதிர்ச்சி அடைகிறாள்.
முத்துப்பாண்டி “இனிமே உன் அண்ணன் வீட்டுக்கு போற வேலையெல்லாம் வச்சிக்க கூடாது” என்று மிரட்ட, பாக்கியம் “ஏன் டா போக கூடாது?” என்று இசக்கிக்கு சப்போர்ட்டாக பேசுகிறாள். மறுபக்கம் பரணி, ரத்னா, வீரா ஆகியோர் சண்முகத்தை ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு வந்து தலையில் தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டுகின்றனர்.
இங்கே பாக்கியம் பேசியதைக் கேட்டு பாண்டியம்மா இசக்கியை அடிக்க வர, பாக்கியம் கையைப்பிடித்து “அவ என் மருமகள், அவளுக்கு துணையா நான் இருக்கேன், அவ மேல கையை வைக்கிற உரிமை உங்களுக்கு இல்ல” என்று பதிலடி கொடுத்து கூட்டிச் செல்கிறாள். அதனைத் தொடர்ந்து வைகுண்டமும் ஷண்முகமும் “இதுவரைக்கும் குடிக்காத ஷண்முகம் இப்படி குடிச்சிட்டு வந்து மானத்தை வாங்கிட்டானே” என்று வருத்தப்படுகின்றனர்.
உடனே பரணி “நேத்து நைட்டே அவன் இசக்கி இசக்கினு புலம்பிட்டு இருந்தான், நான் தான் ஊசி போட்டு தூங்க வைத்தேன், இன்னைக்கும் அதே மனநிலையோட இருந்திருப்பான். சரக்கு கிடைக்கவே குடிச்சிருக்கான்” என்று சொல்லி ஷண்முகத்திற்கு சப்போர்ட்டாக பேசுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் காண