Saidai Duraisamy: இமாச்சல பிரதேசம் சென்றிருந்த அதிமுக மூத்த நிர்வாகி சைதை துரைசாமியின் மகன் பயணித்த கார், சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சைதை துரைசாமியின் மகன் பயணித்த கார் விபத்து:
சென்னை முன்னாள் மேயரான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பர் கோபிநாத் என்பவருடன் இமாச்சல பிரதேசம் சென்றிருந்தார். அவர்கள் சென்ற இன்னோவா கார் ஆனது எதிர்பாராத விதமாக, நேற்று மாலை கின்னவுர் பகுதியில் சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரை இயக்கிய ஓட்டுநர் செந்தில் என்பவர் உயிரிழந்த நிலையில், கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆற்றில் விழுந்த ஆனால் வெற்றி துரைசாமி எங்கிருக்கிறார் என்று தெரியாததால் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை இமாச்சல பிரதேச போலீசார் தமிழ்நாடு போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு குழு உதவி உடன் வெற்றிதுரைசாமியை தேடும் பணி நடந்து வருகிறது. பலியான ஓட்டுநர் டென்ஜின் காஜா பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டது.
#WATCH | Rescue and search operation underway after a car fell into the Sutlej River in Kinnaur yesterday. There were three people present in the car, one person was rescued and admitted to the hospital. This morning the body of the driver, identified as Tenzin, a resident of… pic.twitter.com/yYij7hZ53X
— ANI (@ANI) February 5, 2024
மேலும் காண