விழுப்புரம்: பள்ளி கூட வாழ்க்கையில் நண்பர்கள் பெயர்கள், தொலைபேசி எண்கள் தெரிந்து கொள்ள விருப்பப்படும் நாம் நண்பர்களின் ஜாதியை தெரிந்து கொள்ள விரும்பவதில்லை. அதனை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம். ஜாதி என்பதே கிடையாது என காமெடி நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பள்ளியின் ஆண்டு விழாவில் காமெடி நடிகர் சதீஷ் கலந்து கொண்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் சதீஷ்….
பள்ளி வாழ்க்கை என்பது வாழ்க்கையில் திரும்பவும் கிடைக்காத ஒன்று அதனை நல்லபடியாக ஒழுக்கமாக பயன்படுத்தி கொள்ள வேண்டுமெனவும், உறவினர்கள் வீட்டிலையே கிடைப்பார்கள் எதிரிகள் எங்கு வேண்டுமானாலும் கிடைப்பார்கள் உண்மையான நட்பு என்பது கிடைப்பது என்பது பள்ளி கூட வாழ்க்கையில் தான் கிடைக்கும் என தெரிவித்தார். பள்ளி கூட வாழ்க்கையில் நண்பர்கள் பெயர்கள், தொலைபேசி எண்கள் தெரிந்து கொள்ள விருப்பப்படும் நாம் நண்பர்களின் ஜாதியை தெரிந்து கொள்ள விரும்பவதில்லை. அதனை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம் ஜாதி என்பதே கிடையாது என கூறினார். பள்ளி கூட வாழ்க்கையிலிருந்து இதுவரை தான் புகைபிடித்தது, மதுப்பழக்கம் போன்றவற்றில் ஈடுபட்டது கிடையாது என்பதால் மாணவர்களும் புகை பிடிப்பது, மது பழக்கம் போன்றவற்றை கற்றுக்கொள்ள கூடாது என்றும் அதனால் உடலுக்கு தான் கேடு விளைவிக்கும் பணம் தான் வீணடிக்கப்படுகிறது என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
மாணவர்கள் மத்தியில் பெற்றோர்கள் பொய் சொல்லாமல் மற்றவர்களிடம் ஒப்பிட்டு பேசக்கூடாது
பள்ளி கூட வாழ்க்கையில் வகுப்புகளுக்கு கட் அடிப்பது பிட் அடிப்பது போன்ற சிறு சிறு தவறுகள் கூட செய்திடலாம். ஆனால் காதல் மட்டும் செய்யவே கூடாது என்றும் அப்படி காதல் மட்டும் வந்துவிட்டது என்றால் நம் வாழ்க்கை, நேரம் எதுவும் நம்மிடம் இருக்காது அந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம் என வலியுறுத்தினார். மாணவர்கள் பள்ளி படிப்பினை முடித்து வளர்ந்த போது எதிர்காலத்தில் பெற்றோர்களை தனி குடித்தனம் வைக்க கூடாது என்றும் மாணவர்கள் மத்தியில் பெற்றோர்கள் பொய் சொல்லாமல் மற்றவர்களிடம் ஒப்பிட்டு பேச கூடாதென காமெடி நடிகர் சதீஷ் தெரிவித்தார்.