actor sanjeev venkat shares his clash with actor vijay


சரியாக புரிந்துகொள்ளாமல் தான் விஜய்யிடன் கொஞ்சம் ஓவராக பேசிவிட்டதாக நடிகர் சஞ்சீவ் வெங்கட் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் நெருங்கிய நண்பர்கள்
 தனக்கென ஒரு சிறிய நட்பு வட்டத்தைக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய் . சென்னை லயோலா கல்லூரியில் படித்த போது அவருடைய பேட்ச் மேட்களான சஞ்சீவ், ராம்குமார், ஸ்ரீநாத், மனோஜ், சுஜய் உள்ளிட்ட ஐந்து நபர்கள் விஜய்யின் நீண்ட கால நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இதில் சிலர் வேறு தொழில்கள் செய்துவரும் நிலையில் சஞ்சீவ் மற்றும் ஸ்ரீநாத் ஆகிய இருவரும் சினிமாவில் நடித்து வருகிறார்கள். விஜய்யுடன் சந்திரலேகா, புதிய கீதை, பத்ரி, நிலவே வா உள்ளிட்டப் படங்களில் இணைந்து நடித்துள்ளார். பல வருடங்களுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்தார்கள்.
சின்னத்திரையில் சஞ்சீவ்
திரைப்படங்களில் வாய்ப்புகள் குறைந்ததும் நடிகர் சஞ்சீப் சின்னத்திரையில் தொடர்ச்சியாக நடிக்கத் தொடங்கினார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி தொடரில் அறிமுகமாகிய சஞ்சீவ் அடுத்தடுத்து பல தொடர்களில் நடித்து சீரியல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடர் இவருக்கும் ஒரு பெரிய பிரேக் ஆக அமைந்தது. தற்போது ஒளிப்பரப்பாகி வரும் வானத்தைப் போல தொடரில் நடித்து வருகிறார்
விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பதாலோ என்னவோ சஞ்சீவின் நடிப்பு விஜய்யைப் போல் இருப்பதாக சமூக வலைதளங்களில் ட்ரோல் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இப்படியான நிலையில் சஞ்சீவ் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி சஞ்சீவ் இது குறித்து பேசினார்.’ நான் விஜய் மாதிரி நடிப்பதாக வரும் ட்ரோல்களைப் பார்க்கிறேன். விஜய் என்னிடம் இது பற்றி பேசியிருக்கிறார்.  நீ நடிப்பது , வசனம் பேசுவது எல்லாம் என்னை மாதிரியே இருக்கிறது ,  நீ தினமும் சீரியலில் நடிக்கிறாய் நான் வருடத்திற்கு ஒரு படம் நடிக்கிறேன். இதனால் பார்ப்பவர்கள் நான் தான் உன்னைப் பார்த்து நடிப்பதாக பேசப்போகிறார்கள்’ என்று ஜாலியாக தன்னிடம் சொன்னதாக சஞ்சீவ் தெரிவித்தார். தான் வேண்டுமென்றே விஜய் மாதிரி நடிக்கவில்லை என்றும் தான் எதார்த்தமாக நடிப்பது விஜய் மாதிரி இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
கொஞ்சம் ஓவராக பேசிட்டேன்
மேலும்  நடிகர் விஜய்க்கும் தனக்கும் இடையில் ஒருமுறை கருத்து வேறுபாடு ஏற்ப்பட்ட நிகழ்வையும் அவர் பகிர்ந்துகொண்டு இருக்கிறார். ஒரு முறை ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது தான் அந்த உரையாடலை சரியாக புரிந்துகொள்ளாமல் விஜய்யிடம் கொஞ்சம் ஓவராக பேசிவிட்டதாக அவர் கூறினார். இதனால் கடுப்பான விஜய் உட்கார்ந்த இடத்தைவிட்டு சட்டென எழுந்து தான் கிளம்புவதாக சொல்லி அங்கிருந்து புறப்பட்டார் என்று அவர் கூறினார்.
விஜய் கோபமடைந்தால் அவரிடம் இருந்து பெரிய வார்த்தைகள் எல்லாம் வராது சின்னதாக ஒரு ரியாக்‌ஷன் கொடுத்துவிட்டு அந்த இடத்தைவிட்டு அவர் சென்றுவிடுவார் . அந்த சம்பத்திற்கு பிறது ஒருமுறைக்கு பல முறை யோசித்தப் பின்பே தான் விஜய்யிடன் பேசுவதாக சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.

மேலும் காண

Source link